ADDED : ஜூன் 10, 2026 03:31 AM

அ நிறம் | அளவு
பல்லாரி: வாலிபரை கொன்று உடலை எரித்தவர்களை போலீஸ் தேடுகிறது.
பல்லாரி ரூரல் மோகா கிராமத்தில் எல்.எல்.சி., கால்வாய் அருகே, பாதி உடல் எரிந்த நிலையில் வாலிபர் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது.
மோகா போலீசார் விசாரணையில், அந்த வாலிபர் ஆந்திராவின் பொல்லநகுடம் கிராமத்தின் பசனகவுடா, 27 என்று தெரிந்தது.
கடந்த 7ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற பசனகவுடா வீட்டிற்கு வரவில்லை. அவர் மாயமானதாக பெற்றோர் போலீசில் புகார் செய்து உள்ளனர். தற்போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
பொல்லநகுடம் கிராமத்தில் பசனகவுடாவை கொலை செய்து உடலை மோகாவுக்கு எடுத்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் ஊற்றி எரித்து தடயத்தை அழிக்க முயன்றதும் தெரிந்துள்ளது.
