Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சொத்து தகராறில் இளைஞர் கொலை

சொத்து தகராறில் இளைஞர் கொலை

சொத்து தகராறில் இளைஞர் கொலை

சொத்து தகராறில் இளைஞர் கொலை

ADDED : அக் 22, 2025 03:29 AM


Google News
பாகல்கோட்: சொத்து தொடர்பாக நடந்த தகராறு, இளைஞரின் கொலையில் முடிந்தது.

பாகல்கோட் மாவட்டம், பீளகி தாலுகாவின், லிங்காபுதா கிராமத்தில் வசிப்பவர் ஹனுமந்தா, 60. இவருக்கும், இவரது சகோதரி யமனவ்வா, 55, என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. பரம்பரை சொத்து 10 ஏக்கர், ஹனுமந்தாவுக்கு கிடைத்தது. இதில் ஒன்றரை ஏக்கரை தங்கை யமனவ்வாவுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

தனக்கு தாய் வீட்டு சொத்துகளில் இருந்து, பங்கு வேண்டும் என, இவர் சண்டை போட்டுள்ளார். பல முறை இரண்டு குடும்பத்தினர் இடையே அடிதடியும் நடந்துள்ளது. ஹனுமந்தா மற்றும் அவரது மனைவியின் உயிருக்கு, யமனவ்வா குடும்பத்தினரால் ஆபத்து இருந்தது. கொலை மிரட்டல் விடுத்தனர். இதை வெளியூரில் கல்லுாரி படிக்கும் தன் மகன் விஸ்வநாத்திடம், 26, ஹனுமந்தா கூறினார்.

பெற்றோருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தன் சொந்த ஊருக்கு விஸ்வநாத் வந்தார். விவசாயத்தை கவனித்துக் கொண்டார். நேற்று முன் தினம் இரவு, தன் சகோதரனுடன் விஸ்வநாத் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, யமனவ்வா குடும்பத்தினர் வேண்டுமென்றே தகராறு செய்து, இரும்பு தடியால் விஸ்வநாத்தின் தலையில் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த அவரை, குடும்பத்தினர் பாகல்கோட்டின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து, இவரது பெற்றோர் அளித்த புகாரின்படி, யமனவ்வா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, பீளகி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us