ADDED : அக் 16, 2025 03:30 AM

ஐபோன் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் அதி நவீன இயந்திரங்களுக்கு, வரி விலக்கு அளிக்குமாறு ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபோன் உற்பத்திக்காக பாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், இதில் குறிப்பிட்ட பகுதி அதிநவீன இயந்திரங்கள் வாங்கவே செலவிடப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்திடம் உள்ள இயந்திரங்களை வழங்கலாம் என்றால், இந்திய வருமான வரிச் சட்டம் 1961ன் படி, வெளிநாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான உபகரணங்களை பயன்படுத்த, வரி செலுத்த
வேண்டும்.


