Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


ADDED : மே 01, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 01:32 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு கார்டுகையகப்படுத்தும் பெடரல் வங்கி

பெடரல் வங்கி, பிரிட்டனை சேர்ந்த ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தக பிரிவை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் வாயிலாக சுமார் 4.5 லட்சம் கிரெடிட் கார்டுகளை உள்ளடக்கிய, குறிப்பிட்ட போர்ட்போலியோவை அவ்வங்கி வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், முதல் நிலை நகரங்களில் பெடரல் வங்கியின் சந்தை பங்களிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



வோடபோன் ஐடியா நிலுவை27% குறைத்தது அரசு

வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய, மொத்த வருவாய் நிலுவையில் 27 சதவீதத்தை, மறுமதிப்பீட்டுக்கு பின் மத்திய அரசு குறைத்துள்ளது. இதையடுத்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 87,695 கோடி ரூபாயாக இருந்த நிலுவை தற்போது 64,046 கோடி ரூபாயாக குறைந்துஉள்ளது. இந்த நிலுவை தொகையை வரும் 2031 - 32 நிதியாண்டு துவங்கி, அடுத்த 10 ஆண்டு

களில் கட்டி முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரியங்கா சோப்ராவின் பிராண்டு ரிலையன்ஸ் ரீடெய்ல் வசமாகிறது

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சிகையலங்கார பிராண்டான 'அனாமலி'யை கையகப்படுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது. எனினும், இந்த கையகப்படுத்தலுக்கான தொகை குறித்து தெரிவிக்கவில்லை. தனது அழகுக்கலை தளமான டிராவின் கீழ் அனாமலி பிராண்டு செயல்படும் என ரிலையன்ஸ் ரீடைல் தெரிவித்துள்ளது.

பிராண்டின் கிரியேடிவ் இயக்குநராக பிரியங்கா சோப்ரா தொடர்வார்.



ரூ.10,000 கோடி திரட்டும்வாரி எனர்ஜீஸ் நிறுவனம்

வாரி எனர்ஜீஸ் நிறுவனம், சோலார், மின்சார மின்னணு துறைகளுக்கு தேவையான செமிகண்டக்டர் உற்பத்தியில் களமிறங்க திட்டமிட்டு உள்ளது. இத்திட்டத்திற்காக, 10,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இது தவிர, பல்வேறு வழிகளில் பங்கு, கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டவும் திட்டம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



ஆர்.பி.எல்., வங்கி கட்டுப்பாடு மாற்றத்துக்கு செபி ஒப்புதல்



தனியார் வங்கியான ஆர்.பி.எல்., வங்கியின் 60 சதவீத பங்குகளை, துபாயை சேர்ந்த எமிரேட்ஸ் என்.பி.டி., வங்கி கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின் கீழ், அவ்வங்கியின் நிர்வாக கட்டுப்பாடு மாற்றப்படுவதற்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது. 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பங்கு பரிமாற்றமானது, நம் நாட்டின் நிதித்துறையில் செய்யப்பட உள்ள வெளிநாட்டு முதலீடுகளில், முக்கிய ஒன்றாக

கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us