ஒடிசாவில் ரூ.40,000 கோடியில் மின் வாகன ஆலை ஒப்பந்தம்
ஒடிசாவில் ரூ.40,000 கோடியில் மின் வாகன ஆலை ஒப்பந்தம்
ஒடிசாவில் ரூ.40,000 கோடியில் மின் வாகன ஆலை ஒப்பந்தம்
ADDED : பிப் 10, 2024 07:51 PM

புதுடில்லி:ஒடிசாவில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், ஒருங்கிணைந்த மின் வாகன தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் ஒடிசா மாநில அரசும், ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனமும் கையெழுத்திட்டு உள்ளன.
இது குறித்து, ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:
ஒடிசாவில் ஒருங்கிணைந்த மின் வாகன உற்பத்தி வசதியை அமைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, ஒருங்கிணைந்த மின் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, ஒடிசா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜே.எஸ்.டபிள்யு., நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஆலை 40,000 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, 11,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதனால், மாநிலத்தின் வேலைவாய்ப்பில் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.