மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் ஆமதாபாத் பல்கலை துணை வேந்தர் பேச்சு
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் ஆமதாபாத் பல்கலை துணை வேந்தர் பேச்சு
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் ஆமதாபாத் பல்கலை துணை வேந்தர் பேச்சு
ADDED : செப் 26, 2025 01:24 AM

சென்னை:“தேசிய கல்வி கொள்கை தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகிறது,” என, ஆமதாபாத் திறந்தநிலை பல்கலை துணை வேந்தர் அமி உபாத்யாய் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின், 16வது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலை வளாகத்தில், கவர்னர் ரவி தலைமையில் நேற்று நடந்தது.
பங்கேற்பு குஜராத் மாநிலம் ஆமதாபாத், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை துணை வேந்தர் அமி உபாத்யாய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில், இளநிலை மாணவர்கள் 3,007 பேர், முதுநிலை மாணவர்கள் 3,098 பேர் உட்பட, 7,972 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.
இதில், தங்கப் பதக்கம் வென்ற 304 மாணவ - மாணவியருக்கு, கவர்னர் ரவி பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம் விருதை, மாணவி திவ்யா பெற்றார்.
முக்கியத்துவம் விழாவில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை துணை வேந்தர் அமி உபாத்யாய் பேசியதாவது:
தேசிய கல்வி கொள்கை - 2020 மற்றும் திறந்தநிலை கல்வி முறை ஆகிய இரண்டுமே, மாணவர்களை மையமாக கொண்ட அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.
நான் இலக்கியம் படிக்கும் மாணவியாக இருந்தபோது, பிஎச்.டி., தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மேலும், கலை மற்றும் இலக்கியம், பாரம்பரிய நடன கலைஞராகவும் இருக்க விரும்பினேன்.
ஆனால், அப்போது அது சாத்தியமில்லாமல் போனது. தற்போது, தேசிய கல்வி கொள்கை - 2020, அனைத்திலும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. தேசிய கல்வி கொள்கை தாய் மொழி, பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது.
இவ்வாறு அவர் பேசி னார்.
கவர்னர்
பங்கேற்பு
அமைச்சர் புறக்கணிப்பு
பல்கலை துணை வேந்தர் நியமன விவகாரத்தில், தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, தமிழக பல்கலை பட்டமளிப்பு விழாக்களை, பல்கலையின் இணை வேந்தரான உயர் கல்வித் துறை அமைச்சர் புறக்கணித்து வருகிறார். அந்த வகையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவையும், அமைச்சர் கோவி.செழியன் நேற்று புறக்கணித்தார்.