Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி

கமாடிட்டி

ADDED : செப் 16, 2025 12:28 AM


Google News
Latest Tamil News

வெள்ளி


சர்வதேச சந்தையில், வெள்ளி விலை, கடந்த மூன்று ஆண்டுகளாகவே உயர்ந்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில், சராசரி வெள்ளி விலை 21 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இந்த ஆண்டில் இதுவரை விலை 46 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் (31.10 கிராம்) 42.50 டாலர் ஆகியுள்ளது.

இதற்கு முன் கடந்த 2011ல் ஒரு அவுன்சுக்கு 49.50 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு சந்தையில் வெள்ளி விலை கிராம் 130 ரூபாயைத் தாண்டி வர்த்தகம் ஆகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரை, பெரும்பாலும் தொழில்துறை தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை தேவைக்கான வெள்ளி பயன்பாடு 2024ல் 4 சதவீதம் அதிகரித்து, 6,805 லட்சம் அவுன்ஸாக உயர்ந்தது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக தேவை அதிகரித்து வருகிறது.

உலகளவில் வெள்ளியின் தேவை, கடந்த நான்கு ஆண்டுகளாக, உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. இதனால் 2024ல் 1,489 லட்சம் அவுன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த 2021 முதல் 2024 வரை மொத்த பற்றாக்குறை 6,780 லட்சம் அவுன்ஸ் ஆகும். இது, 2024ல் உலகளாவிய சுரங்க உற்பத்தியின் 10 மாத உற்பத்திக்கு சமம்.

சுரங்க உற்பத்தியை பொறுத்தவரை வெள்ளியானது, செம்பு, ஈயம் மற்றும் துத்தநாகம் சுரங்கங்களில் இருந்து துணைத் தயாரிப்பாகவே உற்பத்தி செய்யப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us