Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வான்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க இத்தாலிக்கு 'டிட்கோ' அதிகாரிகள் பயணம்

 வான்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க இத்தாலிக்கு 'டிட்கோ' அதிகாரிகள் பயணம்

 வான்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க இத்தாலிக்கு 'டிட்கோ' அதிகாரிகள் பயணம்

 வான்வெளி துறையில் முதலீட்டை ஈர்க்க இத்தாலிக்கு 'டிட்கோ' அதிகாரிகள் பயணம்

ADDED : டிச 04, 2025 03:09 AM


Google News
Latest Tamil News
சென்னை : வான்வெளி மற்றும் ராணுவ துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தில், ராணுவ தொழில் வழித்தடம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, வான்வெளி மற்றும் ராணுவ துறையில் அடுத்த பத்து ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு, அந்த துறை நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.

ராணுவ துறை நிறுவனங்கள் தொழில் துவங்க கோவை மாவட்டம், சூலுார், வாரப்பட்டியில் ராணுவ தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இத்தாலி நாட்டில் உள்ள டொரினோ நகரில், இம்மாதம், 2ம் தேதி முதல் இன்று வரை, வான்வெளி மற்றும் ராணுவ தொழில் துறை நிறுவனங்களின் சர்வதேச மாநாடு நடக்கிறது.

அதில் பங்கேற்கும் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி முதலீடுகளை ஈர்க்க, 'டிட்கோ' உயரதிகாரிகள் குழு, இத்தாலிக்கு சென்றுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us