'பிளிப்கார்ட்' இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
'பிளிப்கார்ட்' இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
'பிளிப்கார்ட்' இணை நிறுவனர் பின்னி பன்சால் விலகல்
ADDED : ஜன 28, 2024 09:21 AM

புதுடில்லி : 'பிளிப்கார்ட்' நிறுவனத் தின் இணை நிறுவனர் பின்னி பன்சால், அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து விலகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நிறுவனத்திலிருந்த தனது மீத பங்குகளை விற்ற நிலையில், தற்போது இந்த முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.
தற்போது அவர் 'ஆப்டோர்' என்ற புதிய மின்னணு வர்த்தக தளத்தை தொடங்க அவர் முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007ம் ஆண்டு பின்னி பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால் உடன் இணைந்து துவங்கினார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு 'வால்மார்ட்' நிறுவனம் பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கி, நிறுவனத்தை கையகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சச்சின் பன்சால், பிளிப்கார்டிலிருந்து விலகி 'நவி' என்ற நிதி சேவைகள் நிறுவனத்தை துவக்கினார். தற்போது பின்னி பன்சாலும் விலகுவதாக அறிவித்துஉள்ளார்.