Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : மே 04, 2026 01:11 AM

Follow on Google

ADDED : மே 04, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு - டவுனு - நியுட்ரன்

நியுட்ரன்: வாங்க டவுனு. எனக்கு வாய்ப்பிருக்குமுன்னு சொல்லீட்டு போனீங்க. போன வாரம் எனக்கு வாய்ப்பே இல்லாமல்ல போயிடுச்சு.

டவுனு: அது மட்டுமா சொன்னேன். வாராந்திர ரீதியா இறக்கமுன்னு சொன்னேன் அது கூடத்தான் நடக்கல.

நியுட்ரன்: வாலட்டைலா இருக்குமுன்னு கூடத்தான் சொன்னீங்க.

அப்பு: என்ன நியுட்ரன் சலிச்சுக்கிறீங்க. வெறுமனே குளோசிங்கை வைத்து பார்க்காதீங்க. ஒவ்வொரு நாளும் ஸ்விங் எவ்வளவு இருந்துச்சு பாத்தீங்கல்ல.



நியுட்ரன்: ஆமாமாம். 194, 224, 274 மற்றும் 290ங்கற அளவில அன்றாடம் ஸ்விங் (ஹை - லோ-வுக்கு இடையே இருந்த வித்தியாசம்) இருந்துச்சு.

டவுனு: தெரியுதுல்ல. அப்புறம் எதுக்கு வாலட்டைலா இருக்குமுன்னு சொன்னீங்கன்னு சலிச்சுக்கிறீங்க.

நியுட்ரன்: சும்மா உங்களை வெறுப்பேத்தத்தான்!

அப்பு: வர்ற வாரத்துல ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடுகள், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது. பேக்டரி ஆர்டர்கள், ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, ஜே.ஓ.எல்.டீ., ஜாப் ஓப்பனிங்ஸ், வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

டவுனு: பெரிய தரவுகள் ஏதும் இல்லை. அதனால செய்திகள்தான் சந்தையை வழிநடத்தும். நிறைய நிறுவனங்களின் தணிக்கை செய்யப்பட்ட ரிசல்ட்கள் வர்றவாரம் வெளிவர இருக்குது.



நியுட்ரன்: நாலு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளிவர இருக்குது.



டவுனு: நிப்டிக்கு வாராந்திர அளவில் 23751/23505/23300 போன்ற லெவல்களில் டெக்னிக்கல் சப்போர்ட்டும், 24289/24581/24785 போன்ற லெவல்களில் டெக்னிக்கல் ரெசிஸ்டென்சும் இருக்குது.



நியுட்ரன்: டெக்னிக்கலா சந்தை இப்ப எந்த சூழ்நிலையில இருக்குது டவுனு



டவுனு: போன வாரம் பூராவுமே டெக்னிக்கல்களும் நடக்குறதுக்கும் சம்பந்தம் இல்லாமலேயேதான் இருந்துச்சு.

ஆனாலும் கடந்த வாரம் வாராந்திர ரீதியா 99 புள்ளிகள் மட்டும்தான் நிப்டி ஏற்றம் கண்டுச்சு. எல்லா நாட்களின் இறுதியிலேயும் டீப்பா பார்த்தால், ஒரு திசை தெரியா நிலையிலதான் நிப்டி நிறைவடைந்திருந்துச்சு. வாராந்திர ரீதியில் பார்த்தாலும் அப்படித்தான் இருக்குது.

அப்பு: குறிப்பா சொன்னா நிப்டி பியரிஷாவும் இல்லை. அதே சமயம் எந்த ஒரு டிரெண்டிலேயும் இல்லை.

நியுட்ரன்: இதுக்கு என்னங்க அர்த்தம்.

டவுனு: ஐயா அனுபவஸ்தரே இது தெரியாமத்தான் இவ்வளவு நாள் சந்தையில இருக்கீரா?

நியுட்ரன்: ஆரம்பத்துல நான் வெறுப்பேத்துனதுக்கு இது சரியாப்போச்சு. உங்க வாயால கேட்கலாமுன்னுதான்!

டவுனு: நிப்டி எதையோ எதிர்பார்த்து திசை தெரியா நிலையில இருக்குது. நிப்டி இருக்குதுன்னா என்ன அர்த்தம்? வியாபாரம் பண்றவங்க எதற்காகவோ காத்திருக்காங்க.

நியுட்ரன்: அப்ப வர்ற வாரம் இறக்கமா ஏற்றமா?

அப்பு: அது செய்திகளின் கையில்!

டவுனு: அதேதான். செய்திக்கு ஏற்ப நகரும்.

நியுட்ரன்: அப்ப டெக்னிக்கல் லெவல்களெல்லாம்?

டவுனு: இந்த மாதிரி சூழ்நிலையில அதெல்லாம் ஒரு கைடன்ஸிற்குத்தான்.

நியுட்ரன்: பயமாகுதுங்க.

டவுனு: செய்திகள் நல்லபடியா வந்தா பயமெல்லாம் போயிடும்.,



அப்பு: கடந்த வார இறுதியில ஓரளவுக்கு நிப்டி எச்சரிக்கையுடன் கூடிய பாசிட்டிவ் நிலைமையிலதான் நிறைவடைஞ்சிருக்குது. ஜியோபொலிட்டிக்கல் செய்திகள், கச்சா எண்ணெய் விலை போன்றவைதான் மீண்டும் அதிகமான வாலட்டைலிட்டியை கொண்டுவந்திடுவதற்கான வாய்ப்புகள் இருக்குது.



டவுனு: செய்திகளின் தாக்கம் அதிகமா இருக்கும். அதனால வாலட்டைலிட்டி அதிகரிக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லலாம்.

நியுட்ரன்: என் அனுபவத்தில இப்படி ஒரு சூழலை நான் பார்த்ததில்லீங்க.

டவுனு: உங்க அனுபவம் ரொம்ப பெருசு. ஆனா உங்க மறதி அதைவிட பெருசு.

அப்பு: டவுனு இன்றைய கணக்க தீர்த்துடாரு. எனக்கு பசிக்குது. வாங்க போய் ஒரு வடை, காபி சாப்பிடலாம்,

என்று அழைக்க, மூவரும் அப்புவின் காரில் ஏறி ஹோட்டலை நோக்கி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap