ADDED : ஜூன் 15, 2026 01:54 AM

நியுட்ரன்: வணக்கம் அப்பு!
அப்பு: வணக்கம் நல்லா இருக்கீங்களா?
நியுட்ரன்: எனக்கென்ன உங்க ராஜ்ஜியத்தில அமோகமா இருக்கேன்.
அப்பு: நீங்க பார்த்தது ட்ரெய்லர்தான். இனி பாருங்க.
டவுனு: நான் இருக்கறதையே மறந்த மாதிரி பேசிக்கிட்டிருக்கீங்க.
நியுட்ரன்: அட! டவுனு எப்ப வந்தீங்க?
டவுனு: ஒரு நாள் 461 புள்ளிகள் ஏறுனதுக்கே என்னை அடையாளம் தெரியாம போயிடுச்சா!
நியுட்ரன்: சும்மா தமாசுக்குங்க. உங்களை மறக்க முடியுமா?
அப்பு: போனவாரம் எதனால ப்ளஸ் ஐநுாறு மைனஸ் ஐநுாறுன்னு இருந்தாலும் ரேஞ்சுதான்னு சொன்னீங்களோ. வார ஓப்பனிங்குக்கும் குளோசிங்குக்கும் இடையே 542 புள்ளிகளும், வார ஹை- - லோவுக்கு இடையே 575 புள்ளிகளும் வித்தியாசம் இருந்துச்சு.
நியுட்ரன்: வெள்ளிக்கிழமை 483 புள்ளிகள் வரை நிப்டி மேலே போச்சு.
டவுனு: அதனாலதான் எப்ப வந்தீங்கன்னு கேட்கற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சு!
நியுட்ரன்: கோபிக்காதீங்க. உங்க பவர் முழுமையா எங்களுக்கு தெரியும்.
அப்பு: ஆமாங்க ஐயா. இப்பத்தான் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருக்கோம். உள்ள புகுந்து ஆட்டத்த கலைச்சிடாதீங்க.
நியுட்ரன்: மொத்த விலை குறியீட்டின் அடிப்படையிலான பண வீக்கம், பயணியர் வாகன விற்பனை, பேலன்ஸ் ஆப் டிரேட், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வர்ற வாரம் வெளிவர இருக்குது. கட்டட அனுமதிகள், சில்லறை விற்பனை, பெடரல் ரிசர்வ் வட்டிவிகித முடிவுகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதரம் சார்ந்த தரவுகள் வர்ற வாரம் வெளிவர இருக்குது.
அ ப்பு: 23,822/24,021/24,241-ல வாராந்திர அளவிலான ரெசிஸ்டென் ஸிம் 23,247/22,871/22,651-ல வாராந்தி ர அளவிலான சப்போர்ட்டும், இருக்குது.
டவுனு: ஊரே சப்போர்ட் ரெசிஸ்டென்ஸின்னுதான் சொல்லும். ஒரு நாள் ஏறுனதுக்காக ரெசிஸ்டென்ஸ் சப்போர்ட்டுன்னு ஆர்டரை மாத்தி சொல்லக்கூடாது.
நியுட்ரன்: குட் கேட்ச்!
அப்பு: வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு உங்க கணிப்பை சொல்லுங்க டவுனு.
நியுட்ரன்: ஆமாங்க. உங்க எண்ணத்தை தெரிஞ்சுகிட்டுதான் வியாபாரம் பண்ணனும்.
டவுனு: போன வாரம் எவ்வளவு வியாபாரம் செய்தீங்க நியுட்ரன்.
நியுட்ரன்: அது தொழில் ரகசியம்; வெளியே சொல்லப்படாது.
அப்பு: பூஜ்ஜியமுன்னு சொன்னா கண்ணு பட்டுடுமா நியுட்ரன்?
டவுனு: இந்த வாரம் நோ கணிப்பு. நாங்க தயாரா இருப்போம். போர் பற்றிய செய்திக்கு ஏற்ப வேலையை காட்டுவோம்.
அப்பு: சும்மா இருந்து போரடிச்சுடப் போது டவுனு.
நியுட்ரன்: என்னது சும்மா இருக்கறதா? அது என் டிப்பார்ட்மென்ட்.
டவுனு: செய்திகள் அடிக்கடி முன்னுக்கு பின் முரணா இருக்கறதால சொல்றேன். அப்பு எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க.
நியுட்ரன்: என்னங்க பயமுறுத்தறீங்க.
டவுனு: ஏன்னா போர் குறித்த நிகழ்வுகள் கடந்த காலத்துல அப்படித்தான் இருந்திருக்கு.
நியுட்ரன்: வாஸ்தவம் தான். டவுனு தான் தயாரா இருப்பேன். செய்திக்கேற்ப ஆக்ட் பண்ணுவேன்னு சொல்றார். உங்க கணிப்பு என்ன அப்பு.
அப்பு: அதே நிலைமைதான் எங்க பக்கமும்.
நியுட்ரன்: அப்ப இந்த வாரம் நியுட்ரன் வாரம்.
டவுனு: இறங்கலாம் ஏறலாமுன்னு சொல்றோமே தவிர மாற்றம் இல்லாம இருக்குமுன்னு சொல்லலீங்களே நியுட்ரன்.
நியுட்ரன்: வரும். என்னைக்காவது எனக்கும் ஒருவாரம் முழுதும் வாய்ப்பு வரும்.
டவுனு: வரும் வரும். அடுத்த 100 வருஷத்துல வரும்!
அப்பு: வாராந்திர அளவில பெரிய மாற்றம் வர்றதுக்கான வாய்ப்பு குறைவா இருந்தாலும் ஏற்ற இறக்கத்துக்கு பஞ்சமிருக்காது.
டவுனு: என் கணிப்பும் அதே மாதிரித்தான் இருக்குது.
நியுட்ரன்: அப்ப வாடிக்கையான வேடிக்கைதான் எனக்கா?
அப்பு: அர்ஜென்ட்டா ஒரு இடத்துக்கு போகனும். அடுத்த வாரம் சந்திப்போம் என்று சொல்லி அப்பு கிளம்ப மூவரும் புறப்பட்டனர்.
