தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஜூன் 29, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: வாங்க டவுனு. ஒரு தடவை இறக்கினா ஒரு வாரத்துக்கு தாங்குற மாதிரி இறக்கிடறீங்க

டவுனு: வாய்ப்பளித்ததற்கு நன்றின்னு சொல்லிட்டு அந்த நாளில் முழு வேலையையும் காட்டிட வேண்டியதுதான்.

நியுட்ரன்: அது ஏங்க ஒரே நாளில் அந்த அடி அடிக்கறீங்க.

டவுனு: நிலைமை அப்படி இருக்குது. பாசிட்டிவ்வா நாலு நாள் இருந்தா அதை சரி செய்யற மாதிரி ஒரு நாள் செய்தி வந்துடுது.

நியுட்ரன்: வர்ற வாரத்துல இண்டஸ்ட்ரியல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், ஹெச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., ஹெச்.எஸ்.பி.சி., சர்வீசஸ் பி.எம்.ஐ., வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் அவற்றில் உள்ள டிபாசிட்டின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற நாட்டின் பொருளாதாரம் சார்ந்த தரவுகளும், ஜே.ஓ.எல்.டி., ஜாப் ஓப்பனிங்ஸ், ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வெளிவர இருக்குது.

அப்பு: ஜூன் மாத 'எப் அண்டு ஓ.,' எக்ஸ்பைரி வர்ற வாரத்துல நடைபெற இருக்குது.

நியுட்ரன்: அப்புறம் என்ன. முதல் இரண்டு நாள் அதுக்கேத்த மாதிரிதான் இருக்கும்.

டவுனு: என்ன இப்படி சலிச்சுக்கிறீங்க.

நியுட்ரன்: எனக்கென்னவோ எக்ஸ்பைரி எப்படி இருக்கனுமுங்கறதை முடிவு செஞ்சு வச்சுகிட்டு, நீங்க ரெண்டு பேரும் வியாபாரம் பண்ற மாதிரியே ஒரு பீலிங்.

டவுனு: என்ன நியுட்ரன் நீண்ட நெடிய அனுபவஸ்தருன்னு பெருமை பேசுவீங்க. இன்னைக்கு என்னன்னா புதுசா போன வாரம்தான் வியாபாரத்துக்கு வந்தவரு மாதிரி பேசறீங்க. சந்தையோட மூவ்மென்ட்டை பல விஷயங்கள் நிர்ணயிக்குது.

வர்ற வாரம் பார்த்தீங்கன்னா முதல் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்குமுங்கறது குறித்த கணிப்புகள், வாகன விற்பனை எண்ணிக்கை குறித்த தரவுகள், பருவமழை எப்படி இருக்குதுங்குற நிலைமை, எப்.ஐ.ஐ.,யோட முதலீடுகள், கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் போன்ற பல விஷயங்களோட கலந்து கட்டிய பாதிப்புதான் சந்தையில பிரதிபலிக்கும். இது உங்களுக்கு தெரியாத விஷயமில்லை.

அப்பு: 23,807/23,558/23,375/ போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியா டெக்னிக்கல் சப்போர்ட்டும் 24,283/24,511/24,693 போன்ற லெவல்களில் வாராந்திர ரீதியா டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸும் இருக்க வாய்ப்பு இருக்கு. 24,034ங்குறது முக்கிய திருப்புமுனையா இருக்க வாய்ப்பு இருக்கு.

நியுட்ரன்: நீங்க பாட்டுக்கு சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ்ன்னு சொல்லிக்கிட்டேயிருங்க. அது பாட்டுக்கு எதுக்கும் கட்டுப்படாம போயிட்டே இருக்குது.

அப்பு: இல்லை, இது நியுட்ரன் பேச்சு இல்லை. ரொம்ப அடி வாங்கீட்டீங்களோ!

டவுனு: டவுட்டே இல்லை..

நியுட்ரன்: ஆமாம். போன செவ்வாய்க்கிழமை. 24,100ஐ தாண்டிடுச்சேன்னு கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேன்.

அப்பு: விரலுக்கேத்த வீக்கமுன்னு சொல்வாங்க.

டவுனு: அதைவிடுங்க. நியுட்ரனோட சர்வீஸில அவர் பார்க்காத ஏற்ற இறக்கமா.

நியுட்ரன்: வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்க. உங்க பவர் உங்களுக்கு தெரியாதுன்னு ஏத்தி விட்டீங்க. அதனாலதான் கொஞ்சம் துணிச்சல் வந்து இறங்கினேன். அடி பலமா பட்டுடுச்சு.

அப்பு: சரி. சந்தையில இதெல்லாம் சகஜம்தான் நியுட்ரன்.

டவுனு: என்ன அப்பு எக்ஸ்பைரி வரைக்கும் உங்க கைதான் ஓங்கியிருக்கும் போல இருக்கு.

நியுட்ரன்: அப்பு ஜாக்கிரதை. இந்த வாரம் டவுனு உங்களுக்கு குறிவைக்கிற மாதிரி இருக்குது.

டவுனு: ஏங்க எனக்கு தோணுனத நான் கேட்டேன்.

நியுட்ரன்: என் அனுபவ பாடத்தை நான் சொன்னேன்.

டவுனு: நேராவே மோதிப்பாத்துடலாமுன்னு முடிவு பண்ணீட்டீங்க..

அப்பு: சார். என்ன சீரியஸா பேச ஆரம்பிச்சுட்டீங்க

டவுனு: ஹாஹா! பயந்துட்டீங்களா அப்பு. நிஜமாவே எக்ஸ்பைரி வரைக்கும் உங்களுக்கான வாய்ப்பு இருக்கற மாதிரிதான் எனக்கு தோணுது.

நியுட்ரன்: எனக்கும் அதே மாதிரிதான் தோணுது. ஆனா நான் இந்த வாரம் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்.

டவுனு: லஞ்ச் டைம் ஆச்சு. வீட்டுல எல்லோரும் கோயிலுக்கு போயிருக்காங்க. வாங்க மூனு பேரும் லஞ்சுக்கு வெளியே போகலாம் என்று செல்ல மூவரும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us