தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சவால்களை தாண்டி வளரும் ஜுவல்லரி துறை

 சவால்களை தாண்டி வளரும் ஜுவல்லரி துறை

 சவால்களை தாண்டி வளரும் ஜுவல்லரி துறை


ADDED : ஜூன் 16, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 07:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமண சீசனும், பண்டிகை காலமும் 'ஜுவல்லரி' துறையின் குறுகிய கால வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் என்று 'நுவாமா ரிசர்ச்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் கூறியதாவது:

 தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தாலும், மார்ச் காலாண்டில் நகைகளுக்கான டிமாண்டு தொடர்ந்து நிலையாகவே இருந்துள்ளது

 ஜுவல்லரி நிறுவனங்கள் வலுவான வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன

 ஜூன் காலாண்டிலும் இதே போக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 திருமண சீசன், பண்டிகை காலங்களில் தொடர்ச்சியாகவே நகைகளுக்கு டிமாண்டு இருந்துள்ளது

 மக்கள் எடை குறைவான 'லைட்வெயிட்' நகைகளை விரும்புகின்றனர். பட்ஜெட்டை சமாளிக்க, 9 காரட், 14 காரட், 18 காரட் போன்ற காரட் குறைவான நகைகளையும் வாங்குகின்றனர்

 முதலீட்டு நோக்கில் தங்க கட்டிகளையும், நாணயங்களையும் வாங்குகின்றனர்

 திருமணங்களுக்கு உகந்ததில்லை என்று கருதப்படும் மாதமும், தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருப்பதும் இத்துறைக்கான சவால்கள்

 சவால்கள் இருந்தாலும் கூட, ஜுவல்லரி துறைக்கு சாதகமான சூழலே உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us