Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மீண்டும் 26,000 நோக்கி மெதுவாக பயணிக்கலாம்

 மீண்டும் 26,000 நோக்கி மெதுவாக பயணிக்கலாம்

 மீண்டும் 26,000 நோக்கி மெதுவாக பயணிக்கலாம்


UPDATED : பிப் 17, 2026 12:42 AM

ADDED : பிப் 17, 2026 12:19 AM

Follow on Google

UPDATED : பிப் 17, 2026 12:42 AM ADDED : பிப் 17, 2026 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு நிப்டி-ஆரம்பம்- 25,423.60 , அதிகம் -25,697.00, குறைவு- 25,372.70, நிறைவு- 25,682.75

ஏற்றத்தில் ஆரம்பித்து, சிறிது நேரத்தில் 30 புள்ளிகள் அளவிலான இறக்கத்தை சந்தித்து, பின்னர் மீண்டும் ஏற ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 211 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி100 குறியீடு அதிகபட்சமாக 0.85 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.74 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 14 ஏற்றத்துடனும்; 5 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி மீடியா குறியீடு, அதிகபட்சமாக 0.87 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,264 பங்குகளில், 1,341 ஏற்றத்துடனும்; 1,826 இறக்கத்துடனும்; 97 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டியில் 20 மற்றும் 50 நாள் சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) அருகே கன்சாலிடேஷன் நடந்து கொண்டிருக்கிறது. டெக்னிக்கலாக ஏற்றத்திற்கு தயாராவதைப் போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. 25,750-ல் நல்லதொரு ரெசிஸ்டென்சும், 25,500-ல் நல்லதொரு சப்போர்ட்டும் தற்போதைக்கு இருக்கிறது. 25,750-க்கு மேலே சென்றால், 26,000 நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது.

Image 1536910

Image 1536911

Image 1536912

Image 1536913

ஆதரவு 25,475 25,250 25,125

தடுப்பு 25,795 25,905 26,025

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

பவர் கிரிட் கார்ப்பரேஷன் 300.80 13.60

விப்ரோ 213.19 -0.90

எட்டர்னல் 286.35 1.15

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 925.50 21.60

டாடா ஸ்டீல் 205.50 2.32

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 100.60 6.57

யெஸ் பேங்க் 20.98 0.12

சுஸ்லான் எனர்ஜி 46.28 0.61

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் 262.40 6.65

என்.எம்.டி.சி., லிட். 80.27 0.84

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஐநாக்ஸ் விண்டு 100.74 -5.64

நாட்கோ பார்மா 878.00 54.15

என்.பி.சி.சி., (இந்தியா) 100.02 1.94

மணப்புரம் பைனான்ஸ் 302.80 0.15

கிராம்ப்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் 274.25 6.73

மற்ற சில பங்குகளின் விலை விபரம்

ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் 345.35 9.15

ஏஷியன் பெயின்ட்ஸ் 2,400.00 33.60

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 82.80 1.26

ராலீஸ் இந்தியா 284.95 20.55

சின்ஜீன் இண்டர்நேஷனல் 435.05 0.70

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap