ADDED : மே 07, 2026 02:57 AM

ஒரு லட்சம் கோடி டாலர் 'சாம்சங்' மதிப்பு உயர்வு
'சா ம்சங்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு முதல்முறையாக ஒரு லட்சம் கோடி டாலரை, அதாவது, கிட்டத்தட்ட 94 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஏ.ஐ., துறைக்காக செமிகண்டக்டர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால், சாம்சங் உள்ளிட்ட செமிகண்டக்டர் துறை பங்குகள் விலை உயர்ந்து வருகின்றன.
டிவிடெண்டு வழங்கும் தேசிய பங்கு சந்தை
'என் .எஸ்.இ.,' தனது பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 35 ரூபாய் டிவிடெண்டு வழங்க இருக்கிறது. இதில் 10 ரூபாய் சிறப்பு டிவிடெண்டும் அடங்கும். ஜனவரி - மார்ச் காலாண்டில் என்.எஸ்.இ., நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டை விட 8.3 சதவீதம் உயர்ந்து 2,871 கோடி ரூபாயாக உள்ளது. வருவாய் 22 சதவீதம் வளர்ந்து 4,967.59 கோடி ரூபாயாக உள்ளது.
ரூ.1.5 லட்சம் கோடியானது 'முத்துாட் பைனான்ஸ்' மதிப்பு
'மு த்துாட் பைனான்ஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாயை தாண்டி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. 2011ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாயாக இருந்தது. அதில் இருந்து இப்போது வரை 25 மடங்குக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ளது.
