Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : மே 07, 2026 11:45 PM

Follow on Google

ADDED : மே 07, 2026 11:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய உச்சத்தில் 'கேபிட்டல் கூட்ஸ்' பங்குகள்

நே ற்றைய வர்த்தகத்தில் 'பி.எஸ்.இ., கேபிட்டல் கூட்ஸ்' குறியீடு தோராயமாக 2 சதவீதம் உயர்ந்து 80,468.56 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த குறியீட்டில் உள்ள 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கம்மின்ஸ் இந்தியா, ஜி.இ., வெர்னோவா டி&டி, ஹிட்டாச்சி எனர்ஜி, கிர்லோஸ்கர் ஆயில் இஞ்சின்ஸ், பாலிகேப் இந்தியா' போன்ற பங்குகளும் புதிய உச்சத்தை தொட்டன. இவைதவிர, 'தெர்மேக்ஸ், சி.ஜி பவர்' ஆகிய பங்குகளும் விலை உயர்ந்தன.



லாபம் சரிந்தாலும் ஏற்றத்தில் 'பாரத் போர்ஜ்'

'பா ரத் போர்ஜ்' நிறுவனத்தின் பங்கு விலை நேற்று 8 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து 2026.60 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நிறைவில் 6.36 சதவீத ஏற்றத்துடன் 1,992.90 ரூபாய்க்கு முடிந்தது. இந்நிறுவனத்தின் வருவாய் 17.53 சதவீதம் உயர்ந்து 4,528.04 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், லாபம் 17.40 சதவீதம் குறைந்து 233.44 கோடி ரூபாயாக உள்ளது. லாபம் குறைந்தாலும், 2026-27ம் நிதி ஆண்டில் 25 சதவீத வருவாய் வளர்ச்சியை சாதிப்போம் என்று நிர்வாகம் தெரிவித்ததால், பங்கு விலை உயர்ந்துள்ளது.

தொடர்ந்து உயரும் பி.ஹெச்.இ.எல்.,

பொ துத்துறையை சேர்ந்த 'பி.ஹெச்.இ.எல்., நிறுவனத்தின்' பங்கு நேற்றைய வர்த்தகத்தின் இடையில் 6 சதவீதம் உயர்ந்து 408.35 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்ட நிலையில், 406.45 ரூபாயில் முடிந்தது. 2020ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 35.90 ரூபாயாக இ ருந்த நிலையில், இப்போது 10 மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் லாப விகிதம், சந்தையின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்ததால், பங்கு விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap