sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


UPDATED : ஜூன் 13, 2026 01:17 AM

ADDED : ஜூன் 13, 2026 01:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 01:17 AM ADDED : ஜூன் 13, 2026 01:16 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திங்களன்று பட்டியலாகும் 4 'வேதாந்தா' நிறுவனங்கள்



'வேதாந்தா' நிறுவனத்தில் இருந்து 'வேதாந்தா அலுமினியம் மெட்டல், வேதாந்தா ஆயில் அண்டு கேஸ், வேதாந்தா பவர், வேதாந்தா அயர்ன் அண்டு ஸ்டீல்' ஆகிய 4 நிறுவனங்களும் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலீட்டாளர்களிடம் உள்ள ஒவ்வொரு வேதாந்தா பங்குக்கும், 4 நிறுவனங்களின் பங்குகளும் ஒவ்வொன்று வழங்கப்படுகின்றன. இந்த 4 நிறுவனங்களும் வரும் ஜூன் 15ம் தேதி பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று வர்த்தக முடிவில் வேதாந்தா பங்கு 1.60 சதவீதம் உயர்ந்துள்ளது.



7 சதவிகித லாபத்தில் பட்டியலான 'ஹெக்ஸகன் நியூட்ரிஷன்'


ச மீபத்தில் வெளியான 'ஹெக்ஸகன் நியூட்ரிஷன்' ஐ.பி.ஓ., கிட்டத்தட்ட 54 மடங்கு விண்ணப்பங்களை பெற்று பெரிய வரவேற்பை பெற்றது. ஐ.பி.ஓ.,வில் ஒரு பங்கு 45 ரூபாய் என்ற விலைக்கு வெளியான நிலையில், நேற்று 48 ரூபாய்க்கு, அதாவது 6.66 சதவீத லாபத்தில் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. அதன்பின்பும் விலை 5 சதவீதம் உயர்ந்து வர்த்தக முடிவில் 50.66 ரூபாயாக உள்ளது. இது ஐ.பி.ஓ., விலையை விட 12.60 சதவீதம் அதிகம்.

நாஸ்டாக் குறியீட்டில் 'காக்னிசன்ட்' நீக்கம்



'நா ஸ்டாக் 100' குறியீட்டில் அமெரிக்க பங்கு சந்தையில் நிதி துறை சாராத 100 மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், பிரபல ஐ.டி., நிறுவனமான 'காக்னிசன்ட்' நாஸ்டாக் குறியீட்டில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏ.ஐ., செமிகன்டக்டர் போன்ற துறைகளை சேர்ந்த பங்குகள் கணிசமாக உயர்ந்து, நாஸ்டாக் குறியீட்டுக்குள் நுழைந்ததால், காக்னிசன்ட் வெளியேற்றப்பட்டுள்ளது.

'சிட்டி யூனியன் பேங்க்' போனசுக்கு பின் உயர்வு


'சி ட்டி யூனியன் பேங்க்' தனது பங்குதாரர்களுக்கு 1:3 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்கியது. போனஸ் இஷ்யூ அமல்படுத்தப்பட்டதால், முந்தைய தினம் வர்த்தக முடிவில் பங்கு விலை 256.80 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று 197.40 ரூபாய்க்கு தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய பிறகும் பங்கு விலை 8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. வர்த்தக முடிவில் 4.72 சதவீத ஏற்றத்தில் 201.70 ரூபாயாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us