Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ பண்டு வினியோகஸ்தர்களுக்கு புதிய ஏ.ஐ., தளம் அறிமுகம்

 பண்டு வினியோகஸ்தர்களுக்கு புதிய ஏ.ஐ., தளம் அறிமுகம்

 பண்டு வினியோகஸ்தர்களுக்கு புதிய ஏ.ஐ., தளம் அறிமுகம்


UPDATED : மே 11, 2026 02:45 AM

ADDED : மே 11, 2026 02:40 AM

Follow on Google

UPDATED : மே 11, 2026 02:45 AM ADDED : மே 11, 2026 02:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்வேறு தொழில்துறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் நுழைந்து வரும் நிலையில், 'புரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களுக்காக, புதிதாக 'எட்ஜ்+' என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களின் செயல்திறன், வாடிக்கையாளர் சேவை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த உதவும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இலக்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களை உருவாக்குவது, மார்க்கெட்டிங், ஆய்வு என வினியோகஸ்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஒருங்கே கொண்டிருக்கிறது.

Image 1575084


வினியோகஸ்தர்கள் தங்களது வாடிக்கையாளர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப ஈக்விட்டி, கடன், ஹைப்ரிடு போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சொத்து ஒதுக்கீட்டு உத்திகளை உருவாக்குவது, முதலீட்டு காலத்தை தீர்மானிப்பது, திட்டங்களை பரிந்துரை செய்வது போன்ற வசதிகளையும் 'எட்ஜ்+' கொண்டுள்ளது.

வினியோகஸ்தர்கள் மியூச்சுவல் பண்டுகள் மட்டுமல்லாமல் இன்சூரன்ஸ், பி.எம்.எஸ்., ஏ.ஐ.எப்., வங்கி வைப்பு நிதி, கடன் பத்திரங்கள், என்.பி.எஸ்., போன்ற திட்டங்களையும் வினியோகம் செய்வதற்கு இந்த தளம் வழிவகை செய்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap