ADDED : மே 09, 2026 01:18 AM

ப ங்கு சந்தை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பங்குகளின் விலை விபரங்களுக்கு 30 நாட்கள் கால இடைவெளியை கட்டாயமாக்கி செபி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு ஒரு நாள் மற்றும் மூன்று மாதங்கள் என வெவ்வேறு கால இடைவெளிகள் நடைமுறையில் இருந்தன. பங்குதாரர்களின் கருத்துகளை கேட்டறிந்த செபி தற்போது மாற்றம் செய்துள்ளது.
விழிப்புணர்வு நோக்கத்திற்காக பகிரப்படும் தரவுகள், தற்போதைய சந்தை விலையை விட 30 நாட்கள் பின்தங்கியே இருக்க வேண்டும் என்றும்; இதன் வாயிலாக நேரடி விலையை பயன்படுத்தி தவறான பரிந்துரைகள் வழங்கப்படுவது தடுக்கப்படும் எனவும் செபி தெரிவித்துள்ளது.
செபியின் அங்கீகாரம் பெற்ற என்.ஐ.எஸ்.எம்., பயிற்சி ஆய்வகங்களுக்கு மட்டும், மாணவர் நலன் கருதி, ஒரு நாள் இடைவெளியில் தரவுகளை பயன்படுத்த அனுமதி உண்டு என்றும் இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
