உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 14, 2026 01:38 AM

அ நிறம் | அளவு
பெங்களூரை சேர்ந்த நிதி தொழில்நுட்ப நிறுவனமான, 'ரேஸர்பே', நடப்பு ஆண்டுக்குள்ளாக
ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கு தயாராகி வருகிறது.
இதற்காக ரகசிய முறையில் செபியிடம் வரைவு அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்கு வெளியீட்டின் வாயிலாக, கிட்டத்தட்ட 4,700 கோடி முதல் 5,700 கோடி ரூபாய் வரை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், புதிய பங்குகள் வெளியீடு மற்றும் ஓ.எப்.எஸ்., முறை என, 50:50 அடிப்படையில் இந்த ஐ.பி.ஓ., அமையலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
