Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சென்செக்ஸை காட்டிலும் கூடுதலாக சரிந்த 'டெக்' மியூச்சுவல் பண்டுகள்

 சென்செக்ஸை காட்டிலும் கூடுதலாக சரிந்த 'டெக்' மியூச்சுவல் பண்டுகள்

 சென்செக்ஸை காட்டிலும் கூடுதலாக சரிந்த 'டெக்' மியூச்சுவல் பண்டுகள்


UPDATED : மே 07, 2026 03:20 AM

ADDED : மே 07, 2026 03:07 AM

Follow on Google

UPDATED : மே 07, 2026 03:20 AM ADDED : மே 07, 2026 03:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பாண்டில், சென்செக்ஸ் குறியீட்டை விட, தொழில்நுட்ப துறை சார்ந்த 'டெக்' மியூச்சுவல் பண்டுகள் இருமடங்கு சரிவை சந்தித்துள்ளதால், அதிக லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டு துவக்கம் முதல் மே 6ம் தேதி வரை சென்செக்ஸ் 8.49 சதவீதம் சரிந்துள்ள நிலையில், சில முன்னணி டெக் பண்டுகள் 21 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

'ஏஸ் எம்.எப்., நெக்ஸ்ட்' நிறுவன தரவுகளின்படி, 'ஹெச்.டி.எப்.சி., டெக்னாலஜி, டாடா டிஜிட்டல் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் டெக்னாலஜி' பண்டுகள் இதுவரை கிட்டத்தட்ட 20 சதவீதம் சரிந்துள்ளன. அதேபோல், 'பிராங்க்ளின் இந்தியா, ஆதித்யா பிர்லா, எஸ்.பி.ஐ., கோட்டக்' ஆகிய டெக் பண்டுகள் கிட்டத்தட்ட 18 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளன.

Image 1573623


ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்படும் 'குவான்ட், இன்வெஸ்கோ, எடெல்வைஸ்' பண்டுகள் கூட 7 முதல் 12 சதவீதம் வரை நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

ஒருபுறம் டெக் பண்டுகள் பெருமளவு சரிந்தாலும், மறுபுறம் எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருந்து ஆகிய துறைகள் சார்ந்த பண்டுகள் லாபம் ஈட்டியுள்ளன. மேலும், பன்முகத்தன்மை கொண்ட 'பிளெக்ஸி கேப்' பண்டுகள், சராசரியாக 3.21 சதவீதம் மட்டுமே சரிவை சந்தித்துள்ளன.

சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் தொடர் வீழ்ச்சி மற்றும் மந்தமான தேவையே டெக் பண்டுகளின் இந்த கடுமையான சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் பல துறைகளை உள்ளடக்கியது; ஆனால் டெக் பண்டுகள் குறிப்பிட்ட துறையில் மட்டுமே அதிக முதலீடு செய்திருப்பதால் இந்த சரிவு பெரிய அளவில் எதிரொலிக்கிறது.

இனி வரும் காலங்களில் , உள்நாட்டு ஐ.டி., நிறுவனங்களின் வருவாய் மற்றும் உலகளாவிய பொருளாதார நிலையை பொறுத்தே இந்த பண்டுகளின் செயல்பாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap