Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறங்கும் டிரெண்டில் சிறியதொரு இளைப்பாறுதல்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறங்கும் டிரெண்டில் சிறியதொரு இளைப்பாறுதல்

டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறங்கும் டிரெண்டில் சிறியதொரு இளைப்பாறுதல்


UPDATED : மே 06, 2026 03:20 AM

ADDED : மே 06, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 03:20 AM ADDED : மே 06, 2026 02:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

நேற்று 66 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, வர்த்தகத்தின் இடையில் அதிக ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு, நாளின் இறுதியில் 86 புள்ளிகள் குறைந்து முடிந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 8 குறியீடுகள் ஏற்றத்துடனும், 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி 100 குறியீடு' அதிகபட்சமாக 0.20 சதவீதம் சரிந்தும், ' நிப்டி ஸ்மால்கேப் 50 குறியீடு' அதிகபட்சமாக 0.41 சதவீதம் உயர்ந்தும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் அதிகரித்தும், 6 குறியீடுகள் வீழ்ச்சியுடனும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி ரியால்ட்டி குறியீடு' அதிகபட்சமாக 1.41 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் எக்ஸ் - பேங்க் குறியீடு' அதிகபட்சமாக 0.65 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

Image 1573227


வர்த்தகம் நடந்த 3,391 நிறுவனங்களின் பங்குகளில் 1,600 ஏற்றத்துடனும் 1,680 இறக்கத்துடனும், 111 மாற்றம் ஏதும் இல்லாமலும் காணப்பட்டன. நிப்டி 24,150 - 24,200 என்ற லெவல்களுக்கு கீழே கன்சாலிடேட் ஆகிக்கொண்டிருக்கிற தோற்றத்தை காண்பிக்கிறது. கடந்த சில நாட்களாக குறுகிய அளவிலான கேண்டில்களே தோன்றியுள்ளன. இது சமீபத்தில் நடந்த ஏற்றத்துக்கு பின் அது தொடர்வதற்கு இருக்கும் தயக்கத்தை உறுதி செய்வதாய் இருக்கிறது. டெக்னிக்கலாக 23,800 முதல் 24,200 வரையில் மட்டுமே நிப்டி நடைபெறுவதற்கான சூழலே தற்சமயம் தென்படுகின்றது. மொத்தத்தில் இறங்கும் டிரெண்டில் சிறியதொரு இளைப்பாறுதல் நடைபெறுவதை போன்ற டெக்னிக்கல் தோற்றம் தெரிவதால் 24,200க்கு மேல் சென்றால் மட்டுமே அடுத்த இலக்கான 24,750 நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. செய்திகள் சாதகமாக இருந்தால் மட்டுமே இது நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us