டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் திசை தெரியாத நிலை வரக்கூடும்
டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டியில் திசை தெரியாத நிலை வரக்கூடும்
UPDATED : ஆக 12, 2026 03:36 AM
ADDED : ஆக 12, 2026 03:24 AM

நேற்று 8 புள்ளிகள் இறக்கத்துடன் தொடங்கிய நிப்டி நாள் முழுவதுமே இறக்கத்தில் வர்த்தகமானது. நாளின் இறுதியில் 112 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18-ல் 7 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 11 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிந்தன.
இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 0.22 சதவீத உயர்வுடனும், 'நிப்டி 100' குறியீடு அதிகபட்சமாக 0.40 சதவீத சரிவுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும் முடிவடைந்தன.
இவற்றில், 'நிப்டி பார்மா' குறியீடு அதிகபட்சமாக 1.02 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி சிமென்ட்' குறியீடு அதிகபட்சமாக 1.57 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,478 நிறுவனங்களின் பங்குகளில் 1,487 ஏற்றத்துடனும் 1,865 இறக்கத்துடனும், 126 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.
எச்சரிக்கையுடன் கூடிய சிறிய புல்லிஷ்னெஸ் இன்னும் நிப்டியில் தென்படுகிறது. இருப்பினும் 24,600-க்கு மேலே சென்று நிறைவடைந்தால் மட்டுமே இந்த புல்லிஷ்னெஸ் உறுதிப்படும் என்பது கண்கூடாக தெரிகிறது.
![]() |
நிப்டி 24,600-க்கு மேலே சென்று நிறைவடைந்தால் 24,750 - 24,800 வரை செல்லக்கூடும். 24,420-க்கு கீழே இறக்கம் சென்றால் 24,340 மற்றும் 24,190-24,160 என்ற லெவல்களை அடைவதும் சாத்தியமே.
நிப்டி 24,420 - 24,340 உடனடி சப்போர்ட் லெவலாக இருக்கும் தற்போதைய சூழலில் 24,600-ஐ தாண்டாதவரை ஏற்றம் தொடர்வது உறுதியில்லை. டெக்னிக்கல்கள் பக்கவாட்டு நிலை முதல் சிறிய ஏற்றம் வரை நடக்க வாய்ப்பிருப்பதை காட்டினாலும் நிப்டி திசை தெரியா நிலைக்கு செல்லவே அதிக வாய்ப்பிருக்கிறது.

