தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ டிரெண்ட் மாற 25,200-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்

டிரெண்ட் மாற 25,200-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்

டிரெண்ட் மாற 25,200-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்


ADDED : மார் 03, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாள் முழுதுமே கணிசமான இறக்கத்தை சந்தித்த நிப்டி, 2 மணிக்கு மேல் இறக்கத்தில் இருந்து சற்று மீண்டு, நாளின் இறுதியில் 312 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்து. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.29 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 2.22 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 17 குறியீடுகள் இறக்கத்துடனும்; 2 குறியீடுகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில் 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 2.20 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 0.24 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,296 பங்குகளில், 639 ஏற்றத்துடனும்; 2,580 இறக்கத்துடனும்; 77 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி அனைத்து குறுகியகால சராசரிகளுக்கும் கீழே நிறைவடைந்துள்ளது. டெக்னிக்கலாக டிரெண்டும் மொமெண்டமும் இறக்கம் தொடரக்கூடும் என்பதையே காட்டுகின்றன.

இது போன்ற சூழ்நிலையில், செய்திகளே சந்தையை வழிநடத்தும் என்பதால், டெக்னிக்கல் லெவல்கள் மற்றும் அனாலிசிஸ் அடிக்கடி வேலை செய்யாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில், நிப்டி 25,200-க்கு மேலே செல்லாதவரை ஏற்றம் திரும்புவதற்கான வாய்ப்பு குறைவே எனலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us