Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டிரெண்டு மாறியது; இன்னும் உறுதியாகவில்லை

 டிரெண்டு மாறியது; இன்னும் உறுதியாகவில்லை

 டிரெண்டு மாறியது; இன்னும் உறுதியாகவில்லை


ADDED : மார் 18, 2026 01:21 AM

Follow on Google

ADDED : மார் 18, 2026 01:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு

நிப்டி 23,493.20 23,656.80 23,346.60 23,581.15

காலையில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் நடைபெற்ற நிப்டி வர்த்தகம், 12.30 மணிக்கு மேல் தொடர்ந்து சீரான ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 172 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால்கேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.57 சதவீத ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்கேப் 150' குறியீடு அதிகபட்சமாக 1.03 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 16 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 3 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 0.97 சதவீத இறக்கத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 2.82 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,324 பங்குகளில், 1,933 ஏற்றத்துடனும்; 1,296 இறக்கத்துடனும்; 95 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடரும் என்று சொல்வதற்கான டெக்னிக்கல் அமைப்பு இன்னமும் உருவாகவில்லை. மொமெண்டம் இண்டிகேட்டர்களில் ஒன்றிரண்டு ஏற்றத்திற்கு சாதகமாக இருப்பதைப்போல் காட்டினாலும்கூட, தற்போதைய சூழ்நிலையில், நிப்டி 24,150 என்ற லெவல் வரை சென்று திரும்புவதற்கு மட்டுமே டெக்னிக்கலாக வாய்ப்புள்ளது எனலாம். நிப்டி 24,150-க்கு கீழே இருக்கும் வரை, வருகின்ற ஏற்றமானது டிரெண்ட் மாறிவிட்டது என்று உறுதி செய்துகொள்வதற்கு உதவாத ஒன்றாகவே இருக்கும். செய்திகள் சாதகமாக மாறினால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆதரவு 23,390 23,200 23,080

தடுப்பு 23,700 23,820 23,940

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)

நிப்டி50 (எண்ணிக்கை)

எட்டர்னல் 234.45 12.41

டாடா ஸ்டீல் 195.20 8.26

ஹெச்.டி.எப்.சி., பேங்க் 842.80 2.20

ஐ.டி.சி., 304.45 -3.80

ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,287.00 14.10

நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)

யெஸ் பேங்க் 18.60 0.06

சுஸ்லான் எனர்ஜி 41.26 0.25

என்.ஹெச்.பி.சி., 76.67 1.40

என்.எம்.டி.சி., 78.90 1.34

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 63.70 0.89

நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)

ஏஞ்சல் ஒன் 216.90 0.27

பந்தன் பேங்க் 159.44 -3.10

ஐநாக்ஸ் விண்டு 78.49 0.09

என்.பி.சி.சி. இந்தியா 83.22 0.34

மணப்புரம் 257.25 6.05

மற்ற சில பங்குகளின் விலை விபரம்

இ.பி.எல்., 187.11 6.99

குஜராத் மினரல் 552.00 19.90

கோத்ரெஜ் பிராப்பர்ட்டீஸ் 1581.00 21.00

கோதாவரி பவர் அண்டு இஸ்பாத் 260.00 10.85

ஸ்டீல் அத்தரிட்டி ஆப் இந்தியா 153.00 8.31

*****

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap