தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/சேமிப்பு திட்டம்/ஓய்வூதிய திட்டத்தில் இந்தியா முன்னேற்றம்

ஓய்வூதிய திட்டத்தில் இந்தியா முன்னேற்றம்

ஓய்வூதிய திட்டத்தில் இந்தியா முன்னேற்றம்


ADDED : அக் 22, 2023 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2023 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலக நாடுகளின் ஓய்வூதிய திட்ட அட்டவணையில் இந்தியாவின் ஓய்வூதிய அமைப்பு முன்னேற்றம் அடைந்துள்ளதை அண்மை ஆய்வு தெரிவிக்கிறது.

தனியார் நிறுவனமான மெர்சர் சி.எப்.ஏ கழகம், உலகின் 45 நாடுகளில் ஓய்வூதிய திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்து அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்திய ஓய்வூதிய அமைப்பு சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்திய ஓய்வூதிய செயல்பாட்டில் முன்னேற்றம் இருந்தாலும், தனியார் துறை பென்ஷன் பெறும் ஊழியர்கள் எண்ணிக்கை இன்னமும் மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் பென்ஷன் வசதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

பென்ஷன் பட்டியலில் ஐரோப்பிய நாடான நெதர்லாந்து முதலிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன. பிரேசில் நாடு இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

பென்ஷன் துறையில் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இது முடிவெடுத்தலை மேம்படுத்த உதவும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பென்ஷன் செயல்பாடுகள், முதலீடு தொடர்பான அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us