/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/கடன் பெறும் போது பின்பற்ற வேண்டிய பொன் விதிகள்கடன் பெறும் போது பின்பற்ற வேண்டிய பொன் விதிகள்
கடன் பெறும் போது பின்பற்ற வேண்டிய பொன் விதிகள்
கடன் பெறும் போது பின்பற்ற வேண்டிய பொன் விதிகள்
கடன் பெறும் போது பின்பற்ற வேண்டிய பொன் விதிகள்

மாதத் தவணை:
எந்த வகை கடனாக இருந்தாலும், ஒருவர் தன்னால் திரும்பச் செலுத்தக்கூடிய தொகையை மட்டுமே கடனாக பெற வேண்டும் என்பதே முதல் விதியாகும். மாதத் தவணையை கணக்கிட்டு அதற்கேற்ப கடன் வாங்க வேண்டும். தனிநபர் கடன் எனில் நிகர வருமானத்தில் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
கடன் காலம்:
கடனுக்கான காலத்தை பொறுத்தவரை குறுகிய காலத்தை நாடுவதே நல்லது. வீட்டுக்கடன் எனில் 20 முதல் 30 ஆண்டுகள் வரை கூட கடன் காலம் அளிக்கப்படுகிறது. நீண்ட காலம் எனில் மாதத்தவணை குறைவாக இருந்தாலும் செலுத்தும் வட்டி அதிகமாக இருக்கும்; கடனுக்கான செலவும் அதிகமாகவே அமையும்.
பட்ஜெட் தேவை:
முதல் விதியை போலவே மூன்றாம் விதியும் முக்கியமானது. கடனுக்கான தவணையை தவறாமல் செலுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தவணையை தவறவிடுவது, பலவித பாதிப்பை ஏற்படுத்தும். பட்ஜெட்டை கடைப்பிடித்து, தேவை எனில் செலவுகளை குறைக்க வேண்டும்.
கடன் நோக்கம்:
பல வகையான கடன்களை பெறும் வசதி இருந்தாலும், கடனுக்கான நோக்கம் முக்கியம். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். கடன் வாங்கி ஆடம்பர செலவுகளை மேற்கொள்வது நல்லதல்ல. அதே போல கடன் வாங்கி முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
கடன் தகவல்:
கடன் பெறுவதற்கு முன் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பது அவசியம். ஏனெனில், கடன் பொறுப்பை நிர்வகிப்பதில் குடும்பத்தின் ஒத்துழைப்பு தேவை. மேலும் கடன் தகவலை மறைப்பது, குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம். சரியான கருத்து பரிமாற்றம் திட்டமிடலில் உதவும்.


