/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ இந்தோனேஷிய துணை நிறுவனங்களை விற்கும் ரிலையன்ஸ் பவர் இந்தோனேஷிய துணை நிறுவனங்களை விற்கும் ரிலையன்ஸ் பவர்
இந்தோனேஷிய துணை நிறுவனங்களை விற்கும் ரிலையன்ஸ் பவர்
இந்தோனேஷிய துணை நிறுவனங்களை விற்கும் ரிலையன்ஸ் பவர்
இந்தோனேஷிய துணை நிறுவனங்களை விற்கும் ரிலையன்ஸ் பவர்
ADDED : செப் 29, 2025 11:13 PM

புதுடில்லி : தன் ஐந்து இந்தோனேஷிய துணை நிறுவனங்களை, சிங்கப்பூரைச் சேர்ந்த பயோடிரஸ்டர் நிறுவனத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் நேற்று பங்கு சந்தையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தோனேஷியாவில் உள்ள துணை நிறுவனங்களான பிடி அவனீஷ் கோல் ரீசோர்சஸ், பிடி ஹெரம்பா கோல் ரீசோர்சஸ், பிடி சுமுஹா கோல் சர்வீசஸ், பிடி பிரயான் பின் டாங் டிகா எனர்ஜி, பிடி ஸ்ரீவிஜயா பின் டாங் டிகா எனர்ஜி அகிய நிறுவனங்களின் 100 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதற்கான, உரிய நிபந்தனைகள் மற்றும் சட்டப்பூர்வ தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2025, டிசம்பர் 30க்குள் பங்கு விற்பனை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.


