/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு 'டி.என்., வீ சேப்' திட்டம் உலக வங்கி ரூ.1,185 கோடி நிதியில் அமல் மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு 'டி.என்., வீ சேப்' திட்டம் உலக வங்கி ரூ.1,185 கோடி நிதியில் அமல்
மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு 'டி.என்., வீ சேப்' திட்டம் உலக வங்கி ரூ.1,185 கோடி நிதியில் அமல்
மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு 'டி.என்., வீ சேப்' திட்டம் உலக வங்கி ரூ.1,185 கோடி நிதியில் அமல்
மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு 'டி.என்., வீ சேப்' திட்டம் உலக வங்கி ரூ.1,185 கோடி நிதியில் அமல்
ADDED : செப் 26, 2025 12:54 AM

சென்னை:தமிழகத்தில் பெண்களின் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன், உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்க, 'டி.என்., வீ சேப்' எனப்படும் தமிழக பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பெண்கள் மிகவும் குறைந்த சம்பளம் பெறும் வீட்டு வேலை உள்ளிட்ட அமைப்பு சாரா பணிகளில் பணிபுரிகின்றனர்.
குறிப்பாக, நகரங்களில் பெண்களை விட ஆண்களே அதிகம் பணிபுரிகின்றனர். இதற்கு, குடும்ப பொறுப்பு, பணியிடங்களில் பாதுகாப்பு குறைபாடு ஆகியவை முக்கிய காரணமாக உள்ளன.
பெண்களை அமைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடச் செய்வதுடன், உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைக்க, 'டி.என்., வீ சேப்' எனப்படும் தமிழக பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தை அரசு துவக்கியுள்ளது.
இத்திட்டம், உலக வங்கியின், 1,185 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத்தின் கீழ், வேளாண் சாரா துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
இதற்காக, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது, பெண்களை தொழில் முனைவோராக்க அரசின் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சி றப்பு திட்டங்கள் செயலாக்க துறை, தொழில் துறை, குறு, சிறு, நடுத்தர தொழில் துறை, சமூக நல துறை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.
பள்ளி, கல்லுாரி பெண்களின் திறனை மேம்படுத்த, தமிழக திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக, தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
பெண்கள் வேலைக்கு செல்ல, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முதல் கட்டமாக, 18 இடங்களில் குழந்தைகள் காப்பகங்கள், முதியவர்கள் காப்பகங்கள் அமைக்கப்படும்.
பொருட்கள் உற்பத்தி தொழில்களில் ஈடுபடுவோரின் தயாரிப்புகளுக்கு பிராண்டிங், சந்தைப்படுத்துதல், நிதி ஆலோசனை வழங்கப்படும்.