தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மதிப்பு அடிப்படையில் பாதுகாப்பு உள்ள 'லார்ஜ்கேப்' பங்குகளை தவிர்க்க வேண்டாம்

 மதிப்பு அடிப்படையில் பாதுகாப்பு உள்ள 'லார்ஜ்கேப்' பங்குகளை தவிர்க்க வேண்டாம்

 மதிப்பு அடிப்படையில் பாதுகாப்பு உள்ள 'லார்ஜ்கேப்' பங்குகளை தவிர்க்க வேண்டாம்


ADDED : ஆக 26, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் கடந்த 3 ஆண்டுகளில் லார்ஜ்கேப் பங்குகளைவிட சிறப்பாக செயல்பட்டு வருவதால், முதலீட்டாளர்களின் கவனம் அந்த பங்குகள் மீது அதிகரித்துள்ளது. இருப்பினும், தற்போதைய நிலையில் லார்ஜ்கேப் பங்குகளின் மதிப்பீட்டில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதால், அவற்றை முதலீட்டாளர்கள் புறக்கணிக்க கூடாது என, நிபுணர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.

இதுபற்றி, மேலும் தெரிவித்ததாவது:

ஸ்மால், மிட்கேப் பங்குகள் கடந்த 3 ஆண்டுகளில் லார்ஜ்கேப்பை விட அதிகமாக உயர்ந்துள்ளன. எனவே, தற்போதைய நிலையில் லார்ஜ்கேப்பில் ஒப்பீட்டளவில் அதிக பாதுகாப்பு உள்ளது.

18 மாத லாப வளர்ச்சி மந்தநிலைக்கு பிறகு, 'நிப்டி 500' நிறுவனங்களின் லாப வளர்ச்சி 2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 15 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. லார்ஜ்கேப் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இரட்டை இலக்க லாப வளர்ச்சி பதிவாகிஉள்ளது.

பெரிய வங்கிகள், ஐ.டி., எப்.எம்.சி.ஜி., எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் லாப வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாக வேகமெடுக்கவில்லை.

இந்த நிலை மாறினால், லார்ஜ்கேப் பங்குகளின் மதிப்பீடு மேலும் உயர வாய்ப்பு உள்ளது. வலுவான கடன் வளர்ச்சி மற்றும் சந்தையில் உள்ள அதிகப்படியான பணப்புழக்கம் நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கின்றன.

முதலீட்டாளர்கள் பொதுவாக சமீபத்திய அதிக வருமானத்தைப் பெற்ற ஸ்மால், மிட்கேப் பங்குகளை நோக்கி செல்கின்றனர். ஆனால், கடந்த கால செயல்பாட்டை மட்டும் அடிப்படையாக கொண்டு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

வலுவான போட்டித்திறன் கொண்ட தொழில் மற்றும் இருப்புநிலை, தரமான நிர்வாகம் மற்றும் நீடித்த லாப வளர்ச்சி உள்ள தனிப்பட்ட நிறுவனங்களையே தேர்வு செய்வது முக்கியம். அதேநேரம், கச்சா எண்ணெய் விலை நீண்ட காலம் அதிகமாக நீடித்தால், பொருளாதாரத்திலும் நிறுவனங்களின் லாபத்திலும் அழுத்தம் ஏற்படலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

நல்ல தொழில், வலுவான நிர்வாகம், தரமான இருப்புநிலை மற்றும் நீடித்த லாப வளர்ச்சி உள்ள தனிப்பட்ட நிறுவனங்களையே தேர்வு செய்வது முக்கியம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us