அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்
அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்
அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்
ADDED : ஆக 03, 2024 03:01 AM

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தி புரகலாந்தர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மொய்கான், ராஜூகான் ஆகிய இருவர் மீது அவரது தாய் ஜூலை 30-ம் தேதி புரலாந்தர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேற்று முதல்வரை சந்தித்த நிலையில், புரகலாந்தர் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சிறுமியை சீரழித்த மொய்கான், ராஜூகான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.