Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ நடிகர் தர்ஷன் மீது 'மரண தண்டனை' விதிக்கும் பிரிவில் வழக்கு பதிவு

நடிகர் தர்ஷன் மீது 'மரண தண்டனை' விதிக்கும் பிரிவில் வழக்கு பதிவு

நடிகர் தர்ஷன் மீது 'மரண தண்டனை' விதிக்கும் பிரிவில் வழக்கு பதிவு

நடிகர் தர்ஷன் மீது 'மரண தண்டனை' விதிக்கும் பிரிவில் வழக்கு பதிவு

ADDED : ஜூன் 23, 2024 06:45 AM


Google News
பெங்களூரு: கொலை தொடர்பாக நடிகர் தர்ஷன் மீது, மரண தண்டனை விதிக்கும் பிரிவில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேர், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 'ஏ1-' பவித்ரா கவுடா, 'ஏ2'- தர்ஷன், 'ஏ3-' பவன், 'ஏ4'- ராகவேந்திரா, 'ஏ5'- நந்தீஸ், 'ஏ6'- ஜெகதீஷ், 'ஏ7'- அனுகுமார், 'ஏ8' ரவி, 'ஏ9-' தன்ராஜ், 'ஏ10'- வினய், 'ஏ11'- நாகராஜ், 'ஏ12-' லட்சுமண், 'ஏ13-' தீபக், 'ஏ14' -பிரதோஷ், 'ஏ 15' கார்த்திக், 'ஏ 16' கேசவமூர்த்தி, 'ஏ 17' நிகில் நாயக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முக்கிய பிரிவுகளும், அதற்குரிய தண்டனை விபரங்களும் பின்வருமாறு:

 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302 (கொலை) இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்தால் ஜாமின் கிடைக்காது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

 பிரிவு 201 (சாட்சிகள் சேதம்) இந்த பிரிவில் ஜாமின் கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் மரண தண்டனைக்கு விதிக்கப்படும். அபராதமும் உண்டு.

 120 பி (குற்ற சதிக்கு உடந்தை) ஜாமின் கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதம் சிறை அல்லது அபராதம். இல்லாவிட்டால் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

 364 (கடத்தல்) இந்த பிரிவில் ஜாமின் கிடைக்காது. குற்றம் நிரூபணம் ஆனால் ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டு கடுங்காவல் சிறை.

 384 (மிரட்டல்) இந்த பிரிவில் ஜாமின் கிடைக்காது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்றாண்டு சிறை அல்லது அபராதம். இரண்டும் விதிக்க வாய்ப்பு.

 143 (சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை). இந்த பிரிவில் ஜாமின் கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதம் சிறை தண்டனை.

 147 (கலவரம்) இந்த பிரிவில் ஜாமின் கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை மற்றும் அபராதம். இரண்டும் சேர்த்து விதிக்க வாய்ப்பு.

 149 (கொலை செய்யும் நோக்கில், ஆயுதங்களால் கொடூரமாக தாக்குவது) இந்த பிரிவில் ஜாமின் கிடைக்காது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை.

 355 (தாக்குதல் மற்றும் தனிமனித அவமதிப்பு) இந்த பிரிவில் ஜாமின் கிடைக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம். இரண்டும் சேர்த்து விதிக்க வாய்ப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us