ஆற்றில் தற்கொலைக்கு முயற்சித்தவர் மீட்பு
ஆற்றில் தற்கொலைக்கு முயற்சித்தவர் மீட்பு
ஆற்றில் தற்கொலைக்கு முயற்சித்தவர் மீட்பு
ADDED : ஜூலை 09, 2024 04:20 AM

தட்சிண கன்னடா : பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால், குமாரதாரா ஆற்றில் குதித்துத் தற்கொலைக்கு முயற்சித்த ஆந்திர வாலிபரை, தீயணைப்பு படையினர் மீட்டனர்.
ஆந்திர மாநிலம், மடகசிராவை சேர்ந்தவர் ரவிகுமார், 40. பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருகிறார். பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்தார். சமீபத்தில் பங்குச்சந்தையில் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது.
இதை அடைக்க, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ஆனாலும், பங்குச்சந்தையில் லாபம் பெற முடியவில்லை. இதனால் நொந்து போன அவர், நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் குக்கே சுப்ரமண்யாவுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
பின், கடபா - பஞ்சா சாலையில் உள்ள பாலத்தில் இருந்து குமாரதாரா ஆற்றில் குதித்தார். கர்நாடகாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருவதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ரவிகுமார், புதரில் சிக்கிக் கொண்டார்.
உயிருக்கு போராடிய அவர் கூச்சலிட்டார். இதை கேட்ட அப்பகுதியினர், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்தவர்கள், ரவிகுமாரை மீட்டனர்.
அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டதால், கடபா மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, புத்துார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
9_DMR_0011
குமாரதாரா ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ரவிகுமார். இடம்: தட்சிண கன்னடா.