புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி
புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி உறுதி
ADDED : ஜூன் 02, 2024 03:15 PM

புதுடில்லி: 'புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் சுட்டெரித்து வரும் வெப்ப அலை குறித்தும், ரேமல் புயலால் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மிசோரம், அசாம், மணிப்பூர் மற்றும் மேகலாயா மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்தார். ஆலோசனையில் வட கிழக்கு மாநிலங்களில் புயல் பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் எனவும், மறுசீரமைப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.