ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி : 18 பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி : 18 பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளி : 18 பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
UPDATED : ஆக 01, 2024 07:17 PM
ADDED : ஆக 01, 2024 07:06 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபையில் ரகளையில் ஈடுபட்டதாக 18 பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று துவங்கியது இதில் எதிர்க்கட்சியான பா.ஜ. எம்.எல்.ஏக்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஹேமந்த் சோரன் பதிலளிக்க மறுத்தார். பா .ஜ., எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அவை நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்ததாக 18 பா.ஜ. எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ரவீந்திரா மகாதோ உத்தரவிட்டு சபையை விட்டு வெளியேயேற உத்தரவிட்டார். வெளியேற மறுத்ததால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.