அமைச்சரை கண்டித்து பா.ஜ., போராட்டம்
அமைச்சரை கண்டித்து பா.ஜ., போராட்டம்
அமைச்சரை கண்டித்து பா.ஜ., போராட்டம்
ADDED : ஜூன் 02, 2024 05:59 AM

பீதர்: கல்லுாரியில் நடந்த மோதல் தொடர்பாக, ஹிந்து மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்த விவகாரத்தில், அமைச்சர் ரஹிம்கானை கண்டித்து, பீதரில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
பீதர் டவுன் காந்திகஞ்ச் பகுதியில், குருநானக் தேவ் இன்ஜினியரிங் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் கடந்த மாதம் 29, 30ம் தேதிகளில் ஆண்டு விழா நடக்க இருந்தது.
கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 28ம் தேதி இரவு, கல்லுாரி ஆடிட்டோரியத்தில் ஹிந்து மாணவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' பாடலை ஒலிபரப்பி நடனம் ஆடினர். இதற்கு மற்ற மத மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் இருதரப்பு மாணவர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. மோதல் தொடர்பாக ஹிந்து மாணவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நகராட்சி நிர்வாக அமைச்சர் ரஹிம்கான் துாண்டுதல்படி, ஹிந்து மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறி, அமைச்சரை கண்டித்து, பீதர் கலெக்டர் அலுவலகம் முன், பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் ரஹிம்கான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலெக்டர் கோவிந்த் ரெட்டியிடம் மனுக் கொடுத்தனர்.