Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் 22ம் தேதி சட்டசபை ஒத்திவைப்பு 

பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் 22ம் தேதி சட்டசபை ஒத்திவைப்பு 

பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் 22ம் தேதி சட்டசபை ஒத்திவைப்பு 

பா.ஜ.,வினர் தொடர் போராட்டம் 22ம் தேதி சட்டசபை ஒத்திவைப்பு 

ADDED : ஜூலை 20, 2024 06:41 AM


Google News
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி, பா.ஜ., உறுப்பினர்கள் நடத்திய தொடர் போராட்டத்தால், சட்டசபை கூட்டத்தை, வரும் 22ம் தேதி திங்கட்கிழமைக்கு சபாநாயகர் காதர் ஒத்திவைத்தார்.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரின் 5வது நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும்; வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்' என்று, பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

பின், தங்கள்இருக்கையை விட்டு எழுந்து வந்து, சபாநாயகர் காதர் இருக்கை முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிட்டு இருக்கைக்கு செல்லும்படி சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால் பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனால் சபையை, 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் துவங்கியதும் பா.ஜ., உறுப்பினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இடையிலும் மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து, வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் சித்தராமையா பேசினார்.

ஆனால் அவரை பேசவிடாமல் பா.ஜ., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். பதிலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோஷம் எழுப்பியதால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. உறுப்பினர்கள் யார் என்ன பேசுகின்றனர் என்றே கேட்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசும் போது, ''எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்,'' என்றார். இதனால், அவருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்,சட்டசபை கூட்டத்தை 22ம் தேதி திங்கட்கிழமைக்கு சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

எம்.எல்.சி.,க்கள் கோஷம்

வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், பா.ஜ., - எம்.எல்.சி.,க்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். 'முதல்வர் பதவி விலக வேண்டும், வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டும்' என்று கோஷம் எழுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us