உள்ளூர் திறமைசாலிகளை பயன்படுத்த பா.ஜ., யோசனை
உள்ளூர் திறமைசாலிகளை பயன்படுத்த பா.ஜ., யோசனை
உள்ளூர் திறமைசாலிகளை பயன்படுத்த பா.ஜ., யோசனை
ADDED : ஜூன் 23, 2024 06:21 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் வருவாயை அதிகரிக்க மாநில அரசு நினைத்தால், உள்ளூரில் உள்ள திறமையானவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என, ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., லேஹர் சிங் தெரிவித்தார்.
கர்நாடகாவில் வருவாயை அதிகரிக்க, வெளிநாட்டு நிறுவனத்தை, முதல்வர் சித்தராமையா நியமித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து ராஜ்யசபா பா.ஜ. ,- எம்.பி., லேஹர் சிங், தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மாநில வருவாயை அதிகரிக்க, வெளிநாட்டு நிறுவனத்திற்கு, மாநில அரசு 10 கோடி ரூபாய் செலவழித்து வருவதாக ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அமலுக்கு வந்த பின், மாநிலத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதை காட்டுகிறது.
மாநில நலன் கருதி, வாக்குறுதிகளை திரும்ப பெற காங்கிரஸ் அரசு தயங்கக் கூடாது.
வருமானத்தை அதிகரிக்க ஆலோசனைகள் தேவைப்பட்டால், மாநிலத்தில் திறமையானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளிநாட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஓய்வு பெற்ற திறமையான அதிகாரிகளின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல அறிவுரைகள் வழங்குவர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.