பி.பி.எல்., குடும்பங்களுக்கு இலவச வேப்ப எண்ணெய் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறை தீவிரம்
பி.பி.எல்., குடும்பங்களுக்கு இலவச வேப்ப எண்ணெய் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறை தீவிரம்
பி.பி.எல்., குடும்பங்களுக்கு இலவச வேப்ப எண்ணெய் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதார துறை தீவிரம்
ADDED : ஜூலை 12, 2024 07:09 AM
பெங்களூரு: கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு மிகுந்த பகுதிகளில் உள்ள பி.பி.எல்., ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு, கொசுக்களை ஒழிக்கும் வேப்ப எண்ணெயை இலவசமாக வழங்கும்படி, அனைத்து மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கும், முதன்மை செயலர் ஹர்ஷகுப்தா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பாதிப்பை கட்டுப்படுத்தும்படி, அனைத்து கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
அந்த வகையில், மாநில சுகாதார துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு, சுகாதார துறை முதன்மை செயலர் ஹர்ஷ குப்தா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
...பாக்ஸ்...
கொசு மருந்து தெளிக்க அழைக்கலாம்
சட்டசபை தொகுதி தலைமை சுகாதார அதிகாரி மொபைல் எண்
விஜயநகரா ஷில்பா 83106 03379
பசவனகுடி தேவிகாராணி 94806 88583
சிக்பேட் கோமளா 94806 88593
பி.டி.எம்., லே - அவுட் அனுபமா 99862 09592
ஜெயநகர் மதுசூதன் 94806 88597
பத்மநாபநகர் சுரேஷ் 84315 18219
ராஜாஜிநகர் ராமு 96200 40028
மஹாலட்சுமி லே - அவுட் மஞ்சுளா 94806 88585
கோவிந்த்ராஜ்நகர் ராஜேந்திரன் 93801 71812
மல்லேஸ்வரம் மனோகர் 94490 42433
சாம்ராஜ்பேட் சையத் உமர் பாரூக் 97405 06499
காந்திநகர் மல்லிகார்ஜுன் 94488 43463
சிவாஜிநகர் யஷோவர்த்தன் 78962 22654
ஹெப்பால் நயன்தாரா பாட்டீல் 94806 88578
புலிகேசிநகர் அனந்த ஸ்ரீலட்சுமி 93413 26023
சாந்திநகர் தன்யாகுமார் 97406 40099
சி.வி.ராமன்நகர் மஞ்சுளா 94806 83577
சர்வக்ஞர்நகர் ரவிகுமார் 94487 42408
ராஜராஜேஸ்வரிநகர் தயானந்த் 94496 83898
யஷ்வந்த்்பூர் அருண் 82966 36670
தாசரஹள்ளி சுரேஷ் ருத்ரப்பா 94484 59155
எலஹங்கா லட்சுமி 77600 56027
பேட்ராயனபுரா நவீன்குமார் 94806 88575
மஹாதேவபுரா ராகேஷ் 98804 47187
கே.ஆர்.புரம் விஸ்வேஸ்வரய்யா 63606 40353
பொம்மனஹள்ளி நாகேந்திரகுமார் 98458 06028
பெங்களூரு தெற்கு குமார் 94806 88600
***
கொசு மருந்து தெளிக்க அழைக்கலாம்
சட்டசபை தொகுதி தலைமை சுகாதார அதிகாரி மொபைல் எண்
விஜயநகரா ஷில்பா 83106 03379
பசவனகுடி தேவிகாராணி 94806 88583
சிக்பேட் கோமளா 94806 88593
பி.டி.எம்., லே - அவுட் அனுபமா 99862 09592
ஜெயநகர் மதுசூதன் 94806 88597
பத்மநாபநகர் சுரேஷ் 84315 18219
ராஜாஜிநகர் ராமு 96200 40028
மஹாலட்சுமி லே - அவுட் மஞ்சுளா 94806 88585
கோவிந்த்ராஜ்நகர் ராஜேந்திரன் 93801 71812
மல்லேஸ்வரம் மனோகர் 94490 42433
சாம்ராஜ்பேட் சையத் உமர் பாரூக் 97405 06499
காந்திநகர் மல்லிகார்ஜுன் 94488 43463
சிவாஜிநகர் யஷோவர்த்தன் 78962 22654
ஹெப்பால் நயன்தாரா பாட்டீல் 94806 88578
புலிகேசிநகர் அனந்த ஸ்ரீலட்சுமி 93413 26023
சாந்திநகர் தன்யாகுமார் 97406 40099
சி.வி.ராமன்நகர் மஞ்சுளா 94806 83577
சர்வக்ஞர்நகர் ரவிகுமார் 94487 42408
ராஜராஜேஸ்வரிநகர் தயானந்த் 94496 83898
யஷ்வந்த்்பூர் அருண் 82966 36670
தாசரஹள்ளி சுரேஷ் ருத்ரப்பா 94484 59155
எலஹங்கா லட்சுமி 77600 56027
பேட்ராயனபுரா நவீன்குமார் 94806 88575
மஹாதேவபுரா ராகேஷ் 98804 47187
கே.ஆர்.புரம் விஸ்வேஸ்வரய்யா 63606 40353
பொம்மனஹள்ளி நாகேந்திரகுமார் 98458 06028
பெங்களூரு தெற்கு குமார் 94806 88600
***
கட்டுப்பாட்டு அறை
1பெங்களூரு மாகடி சாலையில் உள்ள சுகாதார துறையின் ஆரோக்கிய சவுதாவில், கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும்.
2பாதிப்பை கண்காணிக்கும் வகையில், கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட அளவில் தடுப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.
3சுகாதார ஊழியர்கள், ஆஷா ஊழியர்கள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளி, கல்லுாரிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
4வெள்ளிக்கிழமை தோறும் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும், 'ஏடிஸ்' லார்வா கொசுக்களை ஒழிக்கும் பணியில் சுகாதார ஊழியர்கள் ஈடுபட வேண்டும்.
5இரண்டு பேர் பாதிக்கப்படும் பகுதிகளை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு, பாதிப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
6கொசுக்களை ஒழிக்கும் மருந்து தெளிக்கும்போது, வீடுகள், உள்விளையாட்டு அரங்கில் இருப்போர், 30 நிமிடங்கள் வெளியே இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். அந்த பகுதிகளில் உள்ள காய்ச்சல் கிளினிக்குகளை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
7பாதிப்பு மிகுந்த பகுதிகளில் உள்ள பி.பி.எல்., ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு, கொசுக்களை ஒழிக்கும் வேப்ப எண்ணெய் இலவசமாக வழங்க வேண்டும். இதை, கை, கால்கள், கழுத்து பகுதிகளில் தடவி கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்.
8வேப்ப எண்ணெய் கிடைக்காத பட்சத்தில், 'சிட்ரோனெல்லா' எண்ணெய் அல்லது 'லெமன் கிராஸ்' எண்ணெய் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
9டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் உடல் நிலையை, 14 நாட்கள் வரை தினமும் கண்காணித்து, மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
10 சிகிச்சை அளிப்பதற்காக, தாலுகா, மாவட்ட அரசு மருத்துவமனைகளில், ஐந்து முதல், 10 படுக்கைகள் தனியாக ஒதுக்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு, ஐ.சி.யு., உட்பட அனைத்து விதமான சிகிச்சையும், பி.பி.எல்., - ஏ.பி.எல்., குடும்பத்தினருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.