லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலி
லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலி
லாரி மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலி
ADDED : ஜூன் 02, 2024 06:13 AM

நெலமங்களா: பெங்களூரு, நெலமங்களா சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்த முயன்ற வாலிபர் மீது, லாரி மோதியதில் அவர் பலியானார்.
பெங்களூரு, அரிசினகுண்டேயை சேர்ந்தவர் நாகராஜ், 25. நெலமங்களா சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி, சுங்க வரி கட்டாமல் செல்ல முற்பட்டது. அப்போது ஊழியர் லாரியை நிறுத்திவிட்டு, வெளியே வந்தார். இந்த வேளையில், லாரியின் பின்னால் வேகமாக வந்த மற்றொரு லாரி, இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
படுகாயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெலமங்களா போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய, லாரி ஓட்டுனர், ஹூப்பள்ளியில் கைது செய்யப்பட்டார்.