குமாரசாமி ராஜினாமா? காங்., முன்னாள் எம்.பி.,சுரேஷ் கிண்டல்!
குமாரசாமி ராஜினாமா? காங்., முன்னாள் எம்.பி.,சுரேஷ் கிண்டல்!
குமாரசாமி ராஜினாமா? காங்., முன்னாள் எம்.பி.,சுரேஷ் கிண்டல்!
ADDED : ஜூன் 11, 2024 10:41 PM

ராம்நகர் : ''எம்.பி., பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார்,'' என்று, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் கூறி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ், ராம்நகர் சென்னபட்டணாவில் நேற்று அளித்த பேட்டி:
புதிதாக அமைந்துள்ள மத்திய அரசில், கனரக தொழில் மற்றும் உருக்கு துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ள குமாரசாமிக்கு எனது வாழ்த்துகள்.
குமாரசாமி எம்.பி., ஆகி இருப்பதால், சென்னபட்டணா எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், எம்.எல்.ஏ., பதவிக்கு பதில் எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று நினைக்கிறேன்.
பதவி, அதிகாரத்தை விட சென்னப்பட்டணா தொகுதி மக்களும், தொண்டர்களும் தான் எனக்கு முக்கியம் என்று, குமாரசாமி பல முறை கூறி உள்ளார். கருணை உள்ளம் கொண்ட அவர், சென்னப்பட்டணா மக்களுக்காக, எம்.எல்.ஏ., பதவியில் நீடிப்பார்.
இடைத்தேர்தலில் சென்னபட்டணா தொகுதியில் போட்டியிட எனக்கு தொண்டர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.
நான் தேர்தலில் தோற்றவன். பெங்களூரு ரூரல் மக்கள் என்னை கைவிட்டனர். சென்னபட்டணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.