சிறை உணவு வேண்டாம்: வீட்டு உணவு கேட்கும் நடிகர் தர்ஷன்
சிறை உணவு வேண்டாம்: வீட்டு உணவு கேட்கும் நடிகர் தர்ஷன்
சிறை உணவு வேண்டாம்: வீட்டு உணவு கேட்கும் நடிகர் தர்ஷன்
ADDED : ஜூலை 10, 2024 02:36 AM

பெங்களூரு: வீட்டு உணவு வழங்க அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் கன்னட நடிகர் தர்ஷன் மனு செய்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னணி நடிகர் தர்ஷன், இவர் தன் காதலி பவித்ரா கவுடாவுக்கு, சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததால், நடிகர் தர்ஷன், அவரை கொன்றார். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.
தர்ஷன் சிறைக்கு வந்த போது, அவரது உடல் எடை 107 கிலோ இருந்தது. ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்து, 97 கிலோவுக்கு வந்துள்ளார். சிறையில் அளிக்கப்படும் உணவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது எடை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று கர்நாடகா ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார். அதில் தனக்கு சிறை உணவு சாப்பிட முடியவில்லை எனவும், வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.