மகாராஜாக்கள் போல் நடந்து கொள்ள வேண்டாம்! கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா 'டோஸ்'
மகாராஜாக்கள் போல் நடந்து கொள்ள வேண்டாம்! கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா 'டோஸ்'
மகாராஜாக்கள் போல் நடந்து கொள்ள வேண்டாம்! கலெக்டர்களுக்கு முதல்வர் சித்தராமையா 'டோஸ்'

விரிவான தகவல்
இவ்வளவு நாட்கள் அலட்சியமாக இருந்த கீழ்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனிமேல் இருந்து அலட்சியமாக இருக்கும் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும்.
நடவடிக்கை
நல்லாட்சியில் கர்நாடகா மாநிலம் முன்மாதிரியாக திகழ்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. இந்தப் பெருமையை தொடரும் பொறுப்பு, உங்கள் மீது உள்ளது. நான் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது என்னை சந்தித்து மக்கள் 15,000 முதல் 20,000 மனுக்கள் வரை கொடுக்கின்றனர்.
மண்வளம்
கர்நாடகாவில் மண்வளம் குறைந்து வருகிறது. இதை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதுடன், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மண் பரிசோதனை செய்ய வேண்டும். இந்தப் பணியை மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.
எனக்கு வருத்தம்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் செய்த பணிகளையும், இன்றைய அதிகாரிகள் செய்யும் பணிகளையும் ஒப்பிடும்போது, நிர்வாகம் மிகவும் திறமையாக மாறியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் திறமையாகவும், தரமாகவும் இல்லை. இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.
ரேஷன் கார்டு ரத்து
'கங்கா கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பம்ப்செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு வன நிலம் ஒதுக்கீடு செய்ய 26,126 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களை சரி பார்த்து பணிகளை முடிக்க வேண்டும்.
783 கோடி ரூபாய்
மக்களை தேவை இன்றி அலைய வைக்காதீர்கள். அவர்களின் குறைகளை கேட்டு தேவையான தீர்வுகளை வழங்க வேண்டும். மாநிலத்தின் ஏற்பட்ட வறட்சியை சிறப்பாக கையாண்டு உள்ளோம்.
ஓய்வூதியம்
மழையால் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் மழையை கையாள தனிப்படைகள் அமைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.