3 பட்டதாரி, 3 ஆசிரியர் தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
3 பட்டதாரி, 3 ஆசிரியர் தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
3 பட்டதாரி, 3 ஆசிரியர் தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
ADDED : ஜூன் 03, 2024 04:50 AM
பெங்களூரு: கர்நாடக மேலவையில் காலியாகும் மூன்று பட்டதாரி, மூன்று ஆசிரியர் தொகுதிகளுக்கு, இன்று தேர்தல் நடக்கிறது.
கர்நாடக மேலவையில், கர்நாடக வடகிழக்கு பட்டதாரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.சி., சந்திரசேகர் பாட்டீல்; காலியாக இருக்கும் கர்நாடக தென்மேற்கு பட்டதாரி தொகுதி; பெங்களூரு பட்டதாரி தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., ஏ.தேவகவுடா ஆகியோரின் பதவிக்காலம்;
கர்நாடக தென்கிழக்கு ஆசிரியர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.சி., நாராயணசாமி; கர்நாடக தென்மேற்கு ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடா; காலியாக இருக்கும் கர்நாடக தெற்கு ஆசிரியர் தொகுதி உறுப்பினரின், பதவிக்காலம் வரும் 21 ம் தேதி முடிகிறது.
இந்த ஆறு தொகுதிகளுக்கும், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, இன்று தேர்தல் நடக்கிறது. ஆறு தொகுதிகளிலும் காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி, சுயேச்சைகள் என 78 பேர் களத்தில் உள்ளனர்.
காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்கிறது.
ஆசிரியர் தொகுதிகளில் போட்டியிடுவோருக்கு ஆசிரியர்களும், பட்டதாரி தொகுதிகளில் போட்டியிடுவோருக்கு, பட்டதாரிகளும் ஓட்டு போட தயாராக உள்ளனர்.
பட்டதாரிகளுக்கு ஓட்டு போட 3 லட்சத்து 63 ஆயிரத்து 573 பேரும்; ஆசிரியர்களுக்கு ஓட்டு போட 70,260 பேரும் தகுதி படைத்தவர்கள். பட்டதாரி தொகுதிகளில் ஓட்டுப்பதிவுக்காக 170; ஆசிரியர் தொகுதிகளுக்கு 461 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், பட்டப்படிப்பு படித்தற்கான கல்லுாரிகள் மூலம் கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்களால் வழங்கப்படும் பாஸ். இதில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டு போடலாம்.
தேர்தல் முடிவுகள், வரும் 6ம் தேதி வெளியாகிறது.