தேர்தல் ஓட்டுப்பதிவு: பா.ஜ., விரிவான ஆலோசனை
தேர்தல் ஓட்டுப்பதிவு: பா.ஜ., விரிவான ஆலோசனை
தேர்தல் ஓட்டுப்பதிவு: பா.ஜ., விரிவான ஆலோசனை
ADDED : ஜூன் 03, 2024 11:57 PM

புதுடில்லி,: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கவுள்ள நிலையில், ஓட்டுப் பதிவு நிலவரங்கள் தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கட்சியின் தேசிய பொதுச் செயலர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இது குறித்து, கட்சியின் தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே நேற்று கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலின் ஒவ்வொரு கட்ட ஓட்டுப் பதிவுகளின்போது நிலவிய சூழ்நிலை குறித்தும், மாநிலங்களில் உள்ள நிலவரங்கள் உள்ளிட்டவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன. ஒவ்வொரு பூத் நிலையிலும் இருந்து கிடைத்த தகவல்கள் ஆராயப்பட்டன.
தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், ஓட்டு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன. புதிய அரசு அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.