மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்
மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்
மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : ஜூன் 23, 2024 06:36 AM
ஷிவமொகா: ஷிவமொகா தீர்த்தஹள்ளியின், தொட்மனே கேரி அருகில், சமீபத்தில் ஷிவமொகா போக்குவரத்து போலீசார், வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக, 17 வயது சிறுவன் பைக்கில் வந்தார்.
அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாதது தெரிந்தது. பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சிறுவன் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது. ஷிவமொகா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணை நடத்திய நீதிமன்றம், 17 வயது மகனுக்கு பைக் கொடுத்த தந்தைக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று உத்தரவிட்டது.