Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/குஜராத்: போட்டியிடாமல் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் முதல் எம்.பிக்கு கோர்ட் நோட்டீஸ்

குஜராத்: போட்டியிடாமல் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் முதல் எம்.பிக்கு கோர்ட் நோட்டீஸ்

குஜராத்: போட்டியிடாமல் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் முதல் எம்.பிக்கு கோர்ட் நோட்டீஸ்

குஜராத்: போட்டியிடாமல் வெற்றி பெற்ற பா.ஜ.,வின் முதல் எம்.பிக்கு கோர்ட் நோட்டீஸ்

UPDATED : ஜூலை 28, 2024 08:10 PMADDED : ஜூலை 28, 2024 08:00 PM


Google News
Latest Tamil News
காந்திநகர்: தேர்தலில் போட்டியிடாமல் வெற்றிபெற்ற பா.ஜ.,வின் முதல் எம்.பிக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் நடந்து முடிந்த பொது தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. குஜராத் மாநிலத்தில் மூன்றாம் கட்டமாக தேர்தல் நடந்தது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜ.,வும் ஒரு தொகுதியில் காங்.,வென்றது. சூரத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடப்பது குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. சூரத் தொகுதி பா.ஜ. வேட்பாளராக முகேஷ்தலால் காங்., வேட்பாளராக நிலேஷ் கும்பானி மற்றும் சுயேட்சைகள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். ஏப்.,22 ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் காங். வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதுடன், காங், கட்சியின் மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து முகேஷ் தலால் போட்டியி்ன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது. இது பா.ஜ., கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது.

இதனிடையே முகேஷ் தலால் வெற்றி பெற்றதை எதிர்த்து காங்., சார்பில் மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 25-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையி்ல் வெற்றி பெற்ற எம்.பி., முகேஷ் தலால் பதில் விளக்கம் அளிக்குமாறு வரும் ஆக.,9-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி தோஷி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us