Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்?

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்?

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்?

எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு இடம்?

ADDED : ஜூன் 10, 2024 12:07 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

இதன்படி, உ.பி.,யில் இருந்து 10 பேர்; பீஹாரில் இருந்து எட்டு பேர், மஹாராஷ்டிராவில் இருந்து ஆறு பேர்; ம.பி., கர்நாடகா, குஜராத்தில் தலா ஐந்து பேர்.

மேலும், ராஜஸ்தான், ஜார்க்கண்டில் தலா நான்கு பேர்; ஒடிசா, ஹரியானா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா மூன்று பேர், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா இருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இதே போல், தமிழகம், கோவா, ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல், அருணாச்சல், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் டில்லியில் இருந்து தலா ஒருவர், அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us