முனாக் கால்வாயில் போலீஸ் ரோந்து தீவிரம்
முனாக் கால்வாயில் போலீஸ் ரோந்து தீவிரம்
முனாக் கால்வாயில் போலீஸ் ரோந்து தீவிரம்
ADDED : ஜூன் 14, 2024 02:20 AM
பவானா:முனாக் கால்வாய் உள்ள ஹரியானா எல்லைப் பகுதியில் 15 கி.மீ., நீளத்திற்கு ரோந்துப் பணியை டில்லி போலீசார் துவக்கியுள்ளனர்.
முனாக் கால்வாயில் வரும் யமுனை ஆற்று நீர், டில்லிக்குள் நுழைந்து ஹைதர்பூர் சுத்திகரிப்பு நிலையத்தை அடைகிறது. அங்கிருந்து டில்லிக்கு வினியோகிக்கப்படுகிறது.
யமுனையில் டில்லிக்கு வரும் தண்ணீரை டேங்கர் லாரி மாபியாக்கள் திருடுவதாக பா.ஜ., புகார் கூறிவருகிறது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி, நகர போலீஸ் கமிஷனரிடம் மனுவும் அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஹரியானா எல்லையில் உள்ள முனாக் கால்வாய் பகுதியில் டில்லி போலீசார் ரோந்து பணியை துவக்கியுள்ளனர்.
பவானா, நரேலா இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஷஹபாத் டெய்ரி, சமை பூர் படாலி காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார், முனாக் கால்வாய் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தண்ணீர் திருட்டைத் தடுக்க முனாக் கால்வாயில் தீவிர கண்காணிப்பை உறுதி செய்யுமாறு, காவல்துறைத் தலைவருக்கு துணைநிலை கவர்னர் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்த நிலையில் போலீசார் ரோந்துப் பணியை துவக்கியுள்ளனர்.