நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்
நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்
நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம்
UPDATED : ஜூலை 25, 2024 02:02 PM
ADDED : ஜூலை 25, 2024 12:16 PM

பெங்களூரு: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகாவில் கடைசியாக, கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. விதிமுறைப்படி ஆறு மாதங்களுக்குள் அடுத்த கூட்டத்தொடர் நடத்த வேண்டும். அதன்படி, கர்நாடக மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் ஜூலை 15ம் தேதி துவங்கியது.
இன்று(ஜூலை 25) கூட்டத்தொடர் துவங்கியதும், முதலில், சட்டசபை, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரே நாடு, ஒரே தேர்தலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யவும், நீட் தேர்வில் கர்நாடகாவுக்கு விலக்கு அளிக்க கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமீபத்தில், நீட் தேர்வு விலக்கு கோரி, தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.